- பிப்ரவரி 2022 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது
- சமீபத்தில் X-லைன் வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியது
பிப்ரவரி 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து கேரன்ஸ் நாட்டில் 1,00,000 யூனிட் விற்பனை செய்து சாதனையைத் தாண்டியுள்ளதாக கியா இந்தியா அறிவித்துள்ளது. ஏழு சீட்டர் கொண்ட எம்பீவி மாருதி சுஸுகி XL6 , ஹூண்டாய் அல்கஸார், மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ போன்றவற்றுக்குப் போட்டியாக இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது இது ப்ரீமியம், பிரஸ்டீஜ், பிரஸ்டீஜ் ப்ளஸ், லக்சுரி, லக்சுரி ப்ளஸ் மற்றும் X-லைன் ஆகிய ஆறு ட்ரிம்ஸில் வழங்கப்படுகிறது, இது மூன்று இன்ஜின் மற்றும் நான்கு கியர்பாக்ஸ் விருப்பங்களில் கிடைக்கின்றன. வாடிக்கையாளர்கள் இதை எட்டு மோனோ-டோன் வண்ணங்கலிருந்து கேரன்ஸை தேர்வு செய்யலாம். இதில் இம்பீரியல் ப்ளூ, மோஸ் ப்ரௌன், ஸ்பார்க்லிங் சில்வர், இன்டென்ஸ் ரெட், க்ளேசியர் ஒயிட் பேர்ல், க்ளியர் ஒயிட், க்ராவிட்டி க்ரே மற்றும் அரோரா ப்ளாக் பேர்ல் ஆகியவை அடங்கும்.
மற்ற செய்திகளில், கேரன்ஸ் வரிசையில் புதிய X-லைன் வேரியண்ட்டை கியா இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. ஆறு சீட்ஸ் கொண்ட எம்பீவியின் இந்த புதிய வேரியண்ட் மேலே நிலைநிறுத்தப்பட்டுள்ளது மற்றும் இதில் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்டிலும் கிடைக்கிறது. இந்த கியாவின் விலை ரூ. 18.95 லட்சம் முதல் ரூ. 19.45 லட்சம் (இரண்டு விலைகளும், எக்ஸ்-ஷோரூம்).
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்