- 12 முதல் 18 லட்சம் வரை விலை இருக்கும்
- இது இனி ஜீப் இன் பேஸ் மாடல் ஆகும்
ஜீப் இந்தியா, ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் பல ரூ. 20 லட்சத்தில் புதிய சி-எஸ்யுவியை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றனர். இந்த புதிய எஸ்யுவி காம்பஸுக்கு கீழே நிலைநிறுத்தப்படும் மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் அடிப்படையிலானதாக இருக்கும்.
ஸ்டெல்லண்டிஸ் பிராண்டின் கீழ் புதிய சி-எஸ்யுவியை உருவாக்க அமெரிக்க வாகன உற்பத்தியாளர் சிட்ரோனுடன் கூட்டு சேரும். C3 ஏர்கிராஸின் பிளாட்ஃபார்ம் ஜீப்பிற்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும், இது குறைந்த விலையிலும், விசாலமானதாகவும், ஐந்து மற்றும் 5+2 சீட்ஸுக்கு ஏற்றதாகவும் இருக்கும். புதிய ஜீப் C3 ஏர்கிராஸ் பிளாட்ஃபார்ம் அடிப்படையாகக் கொண்டதாக இருந்தாலும், ஜீப் எஸ்யுவி முற்றிலும் ஒரு புதிய காராக இருக்கும்.
C3 மற்றும் C3 ஏர்கிராஸ் ஆனது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனைப் பெற உள்ளது, இதில் அதன் கேபினில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளின் தரத்தில் மாற்றங்கள் மற்றும் சில கூடுதல் அம்சங்கள் இதில் அடங்கும். C3 ஏர்கிராஸ் அடிப்படையிலான ஜீப்பின் இந்த எஸ்யுவி ப்ரீமியம் ஃபீச்சர்ஸ் பொருத்தப்பட்டிருக்கும் என்பதை இது காட்டுகிறது.
இன்ஜின் பற்றி பேசுகையில், இந்த ஜீப் எஸ்யுவி சிட்ரோனின் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் மோட்டர் கொண்டிருக்கும், இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 109bhp ஆற்றலையும் 205Nm டோர்க்கையும் உருவாக்குகிறது.
இந்த ஜீப்-சிட்ரோன் கூட்டணி ஒரு சிறந்த இந்திய மாடலை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கிறோம், இதன் விலை ரூ. 15-18 லட்சம் வரை இருக்கும். நாட்டிலேயே ஜீப்பின் மிகவும் விலை குறைந்த மாடல் காம்பஸ் ஆகும், இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 20.69 லட்சத்தில் தொடங்கி ரூ. 32.27 லட்சம் வரை செல்கிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்