- டீசல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கும்
- டாப்-ஸ்பெக் வேரியண்ட் அதிகபட்ச விலை உயர்வைப் பெறுகிறது
ஜீப் இந்தியாவில் அதன் என்ட்ரி லெவல் எஸ்யுவியான காம்பஸின் விலையை திருத்தியுள்ளது.மாடல் இப்போது ரூ.21.73 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் கிடைக்கின்றன.இது ஸ்போர்ட், லிமிடெட் (O), மற்றும் மாடல் S(O) என மூன்று வேரியண்ட்ஸில் கிடைக்கும்.
ஜீப் காம்பஸின்புதிய வேரியண்ட் வாரியான எக்ஸ்-ஷோரூம் விலைகள்:
வேரியண்ட்ஸ் | பழைய விலை | புதிய விலை | வேறுபாடு |
ஸ்போர்ட் | ரூ.21.44 லட்சம் | ரூ.21.73 லட்சம் | ரூ.29,000 |
லிமிடெட் (O) | ரூ.25.64 லட்சம் | ரூ.25.99 லட்சம் | ரூ.35,000 |
மாடல் S (O) | ரூ.27.84 லட்சம் | ரூ.28.22 லட்சம் | ரூ.38,000 |
லிமிடெட் (O) 4x4 ஏடீ | ரூ.29.44 லட்சம் | ரூ.29.84 லட்சம் | ரூ.40,000 |
மாடல் S (O) 4x4 ஏடீ | ரூ.31.64 லட்சம் | ரூ.32.07 லட்சம் | ரூ.43,000 |
ஜீப் காம்பஸின் இன்ஜின் விவரங்கள்
காம்பஸ் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் அல்லது நைன்-ஸ்பீட் டோர்க் கன்வர்டர் யூனிடுடன் 2.0-லிட்டர் டீசல் இன்ஜினுடன் பொருத்தப்பட்டுள்ளது.இது 168bhp மற்றும் 250Nm டோர்க்கை உற்பத்தி செய்யும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது.கூடுதலாக, ஆட்டோமேட்டிக் எடிஷனின் எல்லா வேரியண்ட்ஸும் 4x4 சிஸ்டமுடன் கிடைக்கும்.
காம்பஸின் பெட்ரோல் வேரியண்ட் நிருத்தப்பட்டன
பல கார் உற்பத்தியாளர்கள் இப்போது பெட்ரோல் இன்ஜின்ஸை மட்டுமே தங்கள் வரிசையில் வழங்குகிறார்கள், இந்த ஆண்டு மே மாதம் காம்பஸ் ரேஞ்சின் பெட்ரோல் இன்ஜின் நிறுத்துவதன் மூலம் அமெரிக்க வாகன உற்பத்தியாளர் ஒரு தைரியமான நடவடிக்கையை மேற்கொண்டார்.
ஜீப் இந்தியாவின் லேட்டஸ்ட் நியூஸ்
கடந்த மாதம், கார் தயாரிப்பு நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்காக புதிய 'அட்வென்ச்சர் அஷ்யுர்ட் பிரோக்ராம் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஜீப் காம்பஸ் மற்றும் ஜீப் மெரிடியனுக்கான எக்ஸ்டென்டெட் வாரண்ட்டி, அஷ்யுர்ட் பைபேக், ரோடுசைட் ஆசிஸ்டன்ஸ் மற்றும் வருடாந்திர பராமரிப்பு திட்டங்கள் போன்ற உறுதிசெய்யப்பட்ட நன்மைகள் இதில் அடங்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்