- விலை 0.5 சதவீதம் வரை அதிகரிக்கும்
- ஜீப் காம்பஸ் மற்றும் மெரிடியன் கார்களின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
ஸ்டெல்லண்டிஸ் இந்தியா என்ற ஒரு நிறுவனம் ஜீப் மற்றும் சிட்ரோன் பிராண்டுகளை கையாளுகிறது, இப்போது இந்த இரண்டு பிராண்டுகளின் விலைகளும் ஏப்ரல் 30, 2024 முதல் உயர்வை கண்டுள்ளது. சிட்ரோனின் அனைத்து மாடல்களின் விலைகளிலும் மாற்றங்கள் இருக்கும் என்றாலும், ஜீப் பிராண்டின் காம்பஸ் மற்றும் மெரிடியன் கார்கள் மட்டுமே உயர்வைக் காணும்.
இந்த இரண்டு பிராண்டுகளின் மாடல்களில் 0.5 சதவீதம் விலை மாற்றம் இருக்கும். சராசரியாக அனைத்து மாடல்களின் விலையும் ரூ. 4,000 முதல் ரூ. 17,000 வரை அதிகரிக்கும். உள்ளீடு செலவுகள் மற்றும் செயல்பாட்டு செலவுகள் ஆகியவை விலை உயர்வுக்கு காரணம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது, C3, eC3, C3 ஏர்கிராஸ் மற்றும் C5 ஏர்கிராஸ் ஆகிய நான்கு மாடல்களை சிட்ரோன் இந்தியா நாடு முழுவதும் விற்பனை செய்கிறது. மறுபுறம், ஜீப் பிராண்டிலிருந்து காம்பஸ், மெரிடியன், கிராண்ட் செரோகி மற்றும் ரேங்லர் போன்ற மாடல்கள் உள்ளன. மற்ற செய்திகளில், ஜீப் இந்தியா விரைவில் இந்தியாவில் ரேங்லர் ஃபேஸ்லிஃப்டை அறிமுகப்படுத்தும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்