- இது இந்திய சந்தையில் பிராண்டின் இரண்டாவது இவி மாடலாகும்
- த்ரீ ரோ இவிகளில் இதுவே முதல் மாடலாக இருக்கும்
கியா கேரன்ஸ் இவி 2025 இல் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கியா நிறுவனத்தின் முதல் இவி கார் இதுவாகும், இது இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படலாம். இது மற்றொரு இவி மாடலுடன் அறிமுகப்படுத்தப்படும், அதன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்த இரண்டாவது இவி’யின் செக்மென்ட் மற்றும் பாடி ஸ்டைலைப் பார்க்கும்போது, இது எலக்ட்ரிக் காம்பாக்ட் எஸ்யுவியாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
கேரன்ஸ் இவி’யில் என்ன அம்சங்கள் இருக்கும்?
கியா கேரன்ஸ் இவி சுமார் 500-600 கிமீ தூரம் வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐசிஇ கார்களுடன் ஒப்பிடும்போது, இவி வெர்ஷன் பல டிரிம்களில் வழங்கப்படாது மேலும் அதிக அம்சங்களைக் கொண்ட சிறந்த மாடல்களில் கவனம் செலுத்தும். டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளே, வென்டிலேடெட் மற்றும் பவர்ட் ஃப்ரண்ட் சீட்ஸ், லெவல் 2 ஏடாஸ் மற்றும் எல்இடி லைட் பேக்கேஜ் போன்ற பல அம்சங்கள் இதில் சேர்க்கப்படலாம். இந்த இவி மாடலின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், இது த்ரீ ரோ வரிசையின் முதல் இவி காராக இருக்கும். கியாவின் தற்போதைய ஃபிளாக்ஷிப்களில் EV9 மட்டுமே எலக்ட்ரிக் கார் ஆகும், இது ஆறு மற்றும் ஏழு சீட் விருப்பங்கள் என்ற இரண்டு விருப்பங்களுடன் வரலாம்.
ஸ்டாண்டர்ட் கேரன்ஸ்ஸை விட இது எவ்வளவு விலை அதிகம்?
ஐசிஇ கேரன்ஸின் விலை சுமார் ரூ. 20 லட்சம் மற்றும் இதன் விலை ரூ. 22 லட்சம் முதல் ரூ. 26 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம் (ரேஞ்சைப் பொறுத்து). அறிமுகப்படுத்தப்பட்டதும், இது ஹூண்டாய் க்ரெட்டா இவி, ஹோண்டா எலிவேட் இவி, மஹிந்திரா XUV.e8, மாருதி eVX மற்றும் டொயோட்டா அர்பன் எஸ்யுவி கான்செப்ட் ஆகியவற்றின் ப்ரொடக்ஷன்-ரெடி வெர்ஷனுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்