- அடுத்த ஆண்டு தொடக்கத்தில் லான்ச் ஆகும்
- தற்போது, இந்தியாவில் நிசானின் ஒரே கார் இதுதான்
சமீபத்த்ல் பாரத் என்கேப் கிராஷ் டெஸ்ட்டில் நடந்த சோதனையில் டாடா பஞ்ச் இவி மற்றும் நெக்ஸான் இவி ஆகியவற்றின் ரிபோர்ட்டை அறிவித்தது, இதில் இரண்டும் 5 ஸ்டார் சேஃப்டி ரேட்டிங்கை பெற்றுள்ளன. கிராஷ் டெஸ்ட்டை காட்டும் வீடியோ ஒன்றில் நிசான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் காணப்பட்டது.
படத்தில் காணப்படுவது போல, நிசான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் சற்று மூடப்பட்டிருந்தது. இருப்பினும், அதன் தோற்றத்திலிருந்து, இது தற்போது பிராண்டால் நாட்டில் வழங்கப்படும் மாடலின் முன் முனையின் ஒரு பார்வை. இந்த சப்-ஃபோர் மீட்டர் எஸ்யுவி ஆனது கவர்ச்சிகரமான ஃப்ரண்ட் பம்பர், புதிதாக வடிவமைக்கப்பட்ட கிரில் மற்றும் புதிய ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் ஆகியவற்றைப் பெறும். புதிய அலோய் வீல்கள், புதிதாக வடிவமைக்கப்பட்ட டெயில்லைட்ஸ் மற்றும் ரியர் பம்பரில் மாற்றங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபேஸ்லிஃப்ட் மேக்னைட்டின் இன்டீரியரில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், இது புதிய அப்ஹோல்ஸ்டரி, வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, கூல்டு குளோவ்பாக்ஸ் மற்றும் பலவற்றுடன் வரலாம்.
மேக்னைட் தற்போதைய மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல்என்ஏ மற்றும் டர்போசார்ஜ்ட் இன்ஜின் உள்ளது. இதில் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல், ஏஎம்டீ மற்றும் சிவிடீ கியர்பாக்ஸ்கள் உள்ளன. இதன் இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷனில் எந்த மாற்றமும் செய்யப்படாது என நம்புகிறோம். 2025 மேக்னைட் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், அது ரெனோ கைகர், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திரா XUV3XO ஆகியவற்றுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்