- 230 கி.மீ தூரம் வரை செல்லும் என்று சொல்லப்படுகிறது
- இந்த பிராண்டின் இரண்டாவது எலக்ட்ரிக் காராகும்
சுஸுகி 2023 டோக்கியோ மோட்டார் ஷோவில் புதிய ஸ்விஃப்ட் உடன் eWX இன் கான்செப்ட் வெர்ஷன்னை அறிமுகப்படுத்தியது. இருப்பினும், eWX பிராண்டின் வேகன் ஆர் மாடலின் எலக்ட்ரிக் வெர்ஷன்னைப் போல் தெரிகிறது மற்றும் அதன் சர்வதேச வெளியீட்டிற்குப் பிறகு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
eWX ஆனது C-வடிவ எல்இடி ஹெட்லேம்ப்ஸ் மற்றும் ஒரு பெரிய கண்ணாடியுடன் கூடிய ஃப்ளாட் கிரில்லைப் பெறுகிறது. இந்த காரின் பெட்டி வடிவம் ஏரோடைனமிக் போல் இல்லை. இன்டீரியரில், இது ஒரு சிறிய சென்டர் கன்சோலைப் பெறுகிறது, டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீலுடன் ஒரு ஃப்ளோட்டிங் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் மற்றும் வண்ண சீட் அப்ஹோல்ஸ்டரியை பெறும்.
இதன் நீளம் மற்றும் அகலத்தைப் பற்றி பேசுகையில், eWX 3,395 மி.மீ நீளம், 1,475 மி.மீ அகலம் மற்றும் 1,620 மி.மீ உயரம் கொண்டது. கார் தயாரிப்பாளர் அதன் டெக்னாலஜி விவரக்குறிப்புகளை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், eWX ஒரு முழு சார்ஜில் 230 கி.மீ வரை ஓடும் ரேஞ்சை கொண்டிருக்கும் என்று கூறியுள்ளது.
மற்ற செய்திகளில், கார் தயாரிப்பாளர் 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாட்டில் தனது முதல் எலக்ட்ரிக் வாகனமான eVX ஐ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. சமீபத்தில், இந்த எலக்ட்ரிக் வாகனத்தின் ப்ரோடோடைப் இவி சார்ஜிங் நிலையத்தில் காணப்பட்டது. கூடுதலாக, eVX இந்தியாவில் தயாரிக்கப்பட்டு மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று பிராண்ட் தெரிவித்துள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்