- புதிய டிசைன் லேப்ம்ஸ் மற்றும் பம்பர்கள் இதில் காணலாம்
- 2024 இல் அறிமுகமாகலாம்
மாருதி சுஸுகியின் நீண்ட கால விற்பனையாகும் மாடலில் வேகன் ஆர் ஒன்றாகும். புதிய இன்ஜின், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் புதிய தோற்றம் உள்ளிட்டவை அவ்வப்போது அப்டேட்களை பெற்று வருகிறது. தற்போது, வேகன் ஆர் இன் டெஸ்ட் மாடலைப் பார்த்துள்ளோம், அதில் இந்த ஹேட்ச்பேக் மீண்டும் புதுப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பை படங்களில் புதிய ரியர் பம்பரைக் கொண்ட புரோட்டோடைப்பை வெளிப்படுத்துகின்றன. இது பம்பரில் ஹோரிசொன்டள் பிளாஸ்டிக் மற்றும் இருபுறமும் வெர்டிகல் ரிஃப்ளெக்டர் பொறுதப்பட்டுள்ளன. இது தவிர, டெயில் லேம்ப் ஹவுசிங்கிற்கு தற்போதைய மாடலின் அதே புதிய பிளாக்-அவுட் ட்ரீட்மென்ட் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மாடலைப் பற்றி மிகக் குறைந்த தகவல்கள் கிடைத்தாலும், ஃப்ரன்ட் பகுதியில் சில மாற்றங்களைக் காண எதிர்பார்க்கிறோம். இந்த ஃபேஸ்லிஃப்ட் எடிஷனில் புதிய அலோய் வீல்ஸ் மற்றும் புதுப்பிக்கப்பட்ட உட்புறங்களையும் மாருதி வழங்கக்கூடும்.
தற்போது, இந்த ஹேட்ச்பேக் 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்களுடன் வழங்கப்படுகிறது. சிஎன்ஜி விருப்பமும் அதன் முதல் இன்ஜினுடன் கிடைக்கிறது, அதே நேரத்தில் மேனுவல் மற்றும் ஏஎம்டீ கியர்பாக்ஸ் பெட்ரோல் வேரியன்ட்டில் வழங்கப்படுகிறது. மாருதி சுஸுகி இந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் ஃப்ளெக்ஸ்-ஃபியூல் வேகன் ஆர் மாடலைக் காட்சிப்படுத்தியது, இது 2024 இல் இந்திய சாலைகளில் காணப்படலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்