- அடுத்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படலாம்
- XUV300 ஃபேஸ்லிஃப்ட் பலமுறை டெஸ்டிஙில் காணப்பட்டது
மஹிந்திரா XUV400 இன் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பைப் போன்று புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. XUV300 ஃபேஸ்லிஃப்ட் பலமுறை டெஸ்டிஙில் காணப்பட்டது, இதில் ஒரு பிளாக்-ஆஃப் கிரில்லைக் காட்டுகிறது. இது இவி மாடலாக இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது.
மஹிந்திரா XUV400 ஃபேஸ்லிஃப்ட் டெஸ்ட் மாடல் முற்றிலும் மூடப்பட்டிருந்தது, ஆனால் அதன் ஃப்ரண்ட் லூக் XUV300 ஃபேஸ்லிஃப்ட் டெஸ்ட் கார்களைப் போலவே உள்ளது. இதில் புதிய ஹெட்லேம்ப் மற்றும் டிஆர்எல் அமைப்பு, புதிய ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்பர்ஸ் மற்றும் புதிய அலோய் வீல்ஸ் ஆகியவை அடங்கும்.
முன்னதாக லீக் ஆனா ஸ்பை படங்களில், புதுப்பிக்கப்பட்ட XUV400 இன் இன்டீரியர் வழங்கப்படும் என்று அது காட்டியது. புதிய மற்றும் பெரிய ஃப்ரீஸ்டாண்டிங் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட சென்டர் கன்சோல் உள்ளது.
மஹிந்திரா XUV400 ஆனது 34.5kWh மற்றும் 39.4kWh பேட்டரி பேக்குகளில் ஒற்றை எலக்ட்ரிக் மோட்டாருடன் வழங்கப்படுகிறது. இதில் எந்த மாற்றமும் செய்யப்படாது என நம்புகிறோம். அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, XUV400 ஃபேஸ்லிஃப்ட் டாடா நெக்ஸான் இவி மற்றும் எம்ஜி ZS இவிக்கு போட்டியாக இருக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்