- இந்தியாவில் கேரன்ஸ்க்கு பிறகு பிராண்டின் இரண்டாவது எலக்ட்ரிக் கார் இதுவாகும்
- இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காட்சிப்படுத்தப்பட்டது
கியா தனது புதிய காம்பேக்ட் எலக்ட்ரிக் எஸ்யுவி EV3 ஐ இம்மாதம் 23 ஆம் தேதி சர்வதேச அளவில் லான்ச் செய்ய உள்ளது. நிறுவனம் அதன் சில படங்களை இன்று வெளியிட்டுள்ளது, இது கியா செல்டோஸ் போல் தெரிகிறது. இது செல்டோஸின் எலக்ட்ரிக் வெர்ஷனாக இருக்கலாம் என்றும் அதன் பெயர் EV3 என மாற்றப்பட்டுள்ளது என்றும் நம்பப்படுகிறது. இருப்பினும், கேரன்ஸ்க்குப் பிறகு இந்தியாவில் பிராண்டின் இரண்டாவது எலக்ட்ரிக் கார் இதுவாகும், ஏனெனில் கேரன்ஸின் எலக்ட்ரிக் வெர்ஷன் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் சமீபத்தில் உறுதிப்படுத்தியது. இப்போதைக்கு இந்த கட்டுரையில் EV3 இன் வெளியான படங்கள் பற்றி விவாதிக்கப் போகிறோம்.
அதன் டிசைன் மற்றும் ஃபீச்சர்ஸ் எப்படி இருக்கும்?
EV3 கடந்த ஆண்டு அக்டோபரில் கான்செப்ட் மாடலை காட்சிப்படுத்தியது. இதன் நீளமும் அகலமும் செல்டோஸ் போலவும், ஃப்ரண்ட்டில் செல்டோஸின் ஐசிஇ வெர்ஷனைப் போலவும் இருக்கும். மேலும், EV3 ஆனது பாக்ஸி ரியர் ஃபெண்டர்கள் மற்றும் சிக்னேச்சர் ஸ்டார் மேப் லைட்டிங் கொண்ட டெயில்கேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது மற்ற கார்களில் இருந்து வித்தியாசமாக தோற்றமளிக்கிறது. இது EV9 எஸ்யுவியின் கான்செப்ட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் வெளியிட்டுள்ள படங்களின்படி, ஹெட்லேம்ப்ஸ் மற்றும் டெயில்லேம்ப்ஸ் மட்டுமே காட்டப்பட்டுள்ளன. எல்இடி ஹெட்லைட்ஸ், எல்இடி டிஆர்எல்ஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரூஃப் ரெயில்ஸ் போன்ற அம்சங்களை EV3 இல் தெளிவாகக் காணலாம். இது தவிர டூயல் டோன் நிறமும் இதில் கொடுக்கப்படும். மேலும், அதன் முழு டிசைனிலும் கருப்பு இன்சர்ட்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் எப்போது லான்ச் செய்யப்படும்?
EV3 காம்பேக்ட் எலக்ட்ரிக் செக்மெண்ட்டில் மட்டுமே நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்படும். இருப்பினும், இது சர்வதேச அளவில் வழங்கப்படும். இத்தகைய சூழ்நிலையில், விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய முடியும் என நம்புகிறோம். இருப்பினும், இந்திய சந்தையில் இதை அறிமுகப்படுத்துவது குறித்து நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்