- GX வேரியன்ட் அடிபடையில் இருக்கும்
- ஏழு அல்லது எட்டு சீட்டர் ஆப்ஷனில் கிடைக்கும்
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் அதன் முதன்மை எம்பீவி இனோவா ஹைகிராஸின் GX லிமிடெட் எடிஷன்னை அறிமுகப்படுத்தியது. GX ட்ரிம் அடிப்படையில், இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்டாண்டர்ட் வேரியன்ட்டை விட ரூ. 40,000 விலை உயர்ந்தது, இது ஏழு மற்றும் எட்டு சீட்டர் ஆப்ஷனில் வாங்க முடியும். ஹைகிராஸ் GX லிமிடெட் எடிஷனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.20.07 லட்சம் முதல் ரூ.20.22 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை செல்லும்.
இந்த லிமிடெட் எடிஷன் எம்பீவி ஆனது ஃப்ரண்ட் கிரில்லில் குரோம் அலங்காரம் மற்றும் ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்பரில் சில்வர் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்ஸைக் கொண்டுள்ளது. இது தவிர இது GX வேரியன்ட்டைப் போன்றது. இன்டீரியரில், இது ஒரு சாஃப்ட்-டச் செஸ்நட் ப்ரௌன்-ஃபினிஷில் செய்யப்பட்ட டாஷ்போர்டு மற்றும் VX வேரியன்ட்டில் தரமான டோர் ட்ரிஸைப் பெறுகிறது, மேலும் பவர் விண்டோ ஃபங்ஷன் சுற்றி பிளாக் மற்றும் ப்ரௌன் நிற டூயல்-டோன் சீட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் ஃபாக்ஸ் வூட் ட்ரிம்ஸில் உள்ளது.
2.0 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜினில் மட்டுமே ஹைகிராஸ் GX லிமிடெட் எடிஷனுடன் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 172bhp மற்றும் 205Nm டோர்க்கையும் உருவாக்குகிறது, இது சிவிடீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்