- இதில் ஏடாஸ் ஃபீச்சர் உண்டு
- பவர்ட்ரெயின்யில் மாற்றம் இருக்காது
ஹூண்டாய் அதன் ப்ரீமியம் ஹேட்ச்பேக், i20 இன் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பை வெளியிட உள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் விரைவில் யூரோப்பியன் மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும், அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் அறிமுகமாகும். தற்போதைய ஜெனரேஷன் மாடல் 2020 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
i20 இன் மிட்-லைஃப் அப்டேட் ஹேட்ச்பேக்கின் வெளிப்புறத்தில் சில வடிவமைப்பு மாற்றங்களைக் கொண்டு வருகிறது. புதிய ஹெட்லேம்ப்ஸ் மற்றும் கவர்ச்சியான ஏர் டேம்ஸுடன் மற்றும் ஸிலீக் டிசைனில் உள்ள கிரில்லைப் பெறுகிறது. பக்கத்தில், புதியதாக வடிவமைக்கப்பட்ட அலோய் வீல்ஸ் ஸ்டார் போன்ற டூயல்-டோன் வடிவத்தைப் பெறுவது ஒரு சிறப்பம்சமாகும். பின்புறத்தில், பம்பர் புதிய ஸ்கிட் பிளேட்டுடன் திருத்தப்பட்டுள்ளது மற்றும் கான்ட்ராஸ்ட்டிங் பிளாக் எலிமெண்ட்ஸ் அதன் ஸ்போர்ட்டி தோற்றத்தை சேர்க்கின்றது. மேலும், i20 ஃபேஸ்லிஃப்ட் லூசிட் லைம் மெட்டாலிக், மெட்டா ப்ளூ பேர்ல் மற்றும் லுமென் க்ரே பேர்ல் உள்ளிட்ட புதிய பெயிண்ட்டை பெறுகிறது.
இன்டீரியர், லேஅவுட் கிட்டத்தட்ட தற்போதைய பதிப்பைப் போலவே உள்ளது. 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் போன்ற அம்சங்கள் மற்ற பதிப்பிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், i20 ஃபேஸ்லிஃப்ட் இப்போது ஏடாஸ் தொகுப்புடன் வருகிறது.
i20 ஆனது 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் 48V மைல்ட்-ஹைப்ரிட் டெக்னாலஜியுடன் சிக்ஸ்-ஸ்பீட் ஐஎம்டீ அல்லது செவன்-ஸ்பீட் டிசிடீ யூனிட்டுடன் உலகளவில் விற்பனை செய்யப்படும். இது இந்தியாவில், 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் விருப்பத்தையும் பெறுகிறது.
மொழிபெயர்த்தவர்: பவித்ரா மதியழகன்