- சோனெட் ஃபேஸ்லிஃப்ட் விலை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்படும்
- நாளை (14 டிசம்பர், 2023) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்
நாளை நடைபெறவிருக்கும் அதன் அறிமுகத்திற்கு முன்னதாக, கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் பற்றிய முக்கியமான விவரங்களை கார்வாலே கைபற்றியது. கார் தயாரிப்பாளர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட சப்-ஃபோர் மீட்டர் எஸ்யுவியின் விலைகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கியா 2024 சோனெட்டை நாளை (14 டிசம்பர் 2023) வெளியிடும் அதே நேரத்தில், இந்த பிராண்ட் மாடலின் முன்பதிவுகளை டிசம்பர் 20 முதல் திறக்க உள்ளது. புதுப்பிக்கப்பட்ட மாடல் எக்ஸ்டீரியரில் காஸ்மெட்டிக் அப்டேட்கள் மற்றும் இன்டீரியரில் கூடுதல் அம்சங்களை பெறும். வாடிக்கையாளர்கள் இதை ஏழு வேரியன்ட்ஸ் மற்றும் 11 வண்ணங்களில் இருந்து தேர்வு செய்ய முடியும்.
சோனெட் ஃபேஸ்லிஃப்ட் இன்ஜினில் 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே வழங்கப்படும். 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல், ஐஎம்டீ மற்றும் டோர்க் கன்வர்டர் ஆட்டோமேட்டிக் யூனிட் உடன் கிடைக்கும். மறுபுறம், 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் சிக்ஸ்-ஸ்பீட் ஐஎம்டீ யூனிட் மற்றும் செவன்-ஸ்பீட் டிசிடீ யூனிட்டுடன் இணைக்கப்படும்.
அம்சங்களைப் பொறுத்தவரை, புதிய கியா சோனெட் ஆனது ஆறு ஏர்பேக்குகள், லெவல் 1 ஏடாஸ் சூட், டச் அடிப்படையிலான ஏசிகன்ட்ரோல், நான்கு வழியில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பவர் டிரைவர் சீட், 360 டிகிரி கேமரா,வாய்ஸ்-கன்ட்ரோல் வின்டோ ஃபங்ஷன், ரிமோட் ஏசி கன்ட்ரோல், முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்ஸ், ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் புதிய 10.25-இன்ச் வண்ண இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே, எலக்ட்ரிக் சன்ரூஃப், வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், ஓடீஏ அப்டேட்ஸ், கியா கனெக்ட், 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் கனெக்டிவிட்டி மற்றும் ஏழு ஸ்பீக்கர் கொண்ட போஸ் சவுண்ட் சிஸ்டம் போன்ற ஃபீச்சர்ஸுடன் வழங்கபடும்
எக்ஸ்டீரியரில், ஃபேஸ்லிஃப்ட் கியா சோனெட் ஆனது புதிய எல்இடி ஹெட்லேம்ப்ஸ் மற்றும் இன்டெக்ரேட்டட் எல்இடி டிஆர்எல்’ஸ், திருத்தப்பட்ட ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்ப்பர்கள், புதிய செங்குத்தாக அடுக்கப்பட்ட எல்இடி டெயில்லைட்ஸ், பூட்லிடில் எல்இடி லைட் பார், புதிய எல்இடி ஃபாக் லைட்ஸ் மற்றும் ரியரில் ஒரு புதிய ஸ்கிட் பிளேட்டை பெறுகிறது.