- 2024 இந்தியாவில் புதிய கியா கார்னிவல் அறிமுகப்படுத்தப்படும்
- 7 மற்றும் 9 சீட்டர் ஆப்ஷனில் வழங்கப்படலாம்
இப்போது அது அதிகாரப்பூர்வமானது. சுருக்கமாக, இந்தியாவில் புதிய கியா கார்னிவல் 2.2 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜினுடன் வழங்கப்படும். இந்திய-ஸ்பெக் இன்ஜின் 2019 இன் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது இது வரும் மாடலிலும் தொடரா வாய்ப்புள்ளது.
புதிய இன்ஜின் 8-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் 191bhp/441Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது. பழைய மாடல் புதிய காரைப் போலவே 197bhp மற்றும் 440Nm டோர்க் திறனையும் உற்பத்தி செய்கிறது. இதில் பெரிய மாற்றமாக 60-லிட்டரிலிருந்து 72-லிட்டர் ஃபியூல் டேங்க் மாற்றிம்மைக்கபட்டுள்ளது. அதன் மைலேஜ் பற்றி பேசுகையில், கொரிய-ஸ்பெக் கார் 72-லிட்டர் டேங்கில் லிட்டருக்கு 13 கி.மீ மற்றும் 936 கி.மீ. ரேஞ்சை கொடுக்கிறது. இது இந்திய மார்க்கெட்க்கும் குடுக்கும் என்று எதிர்ப்பார்களாம்.
கியா கார்னிவலின் உட்புறம், அம்சங்களின் பட்டியல் மற்றும் வெளிப்புற வடிவமைப்பு போன்ற விவரங்கள் வெளியாகியுள்ளன. இது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டால், டொயோட்டா இனோவா ஹைகிராஸ், எம்ஜி குளோஸ்டர் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற கார்ஸுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்