- 2024 இன் பிற்பகுதியில் இந்தியாவுக்கு வர வாய்புள்ளது
- திருத்தப்பட்ட எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியரைப் பெறுகிறது
2024 ரெனோ டஸ்டர் டாசிய டஸ்டர் என்றும் அழைக்கப்படலாம் இறுதியாக இன்று சர்வதேச அளவில் அதன் உலகளாவிய அறிமுகத்தை செய்துதது. நியூ-ஜெனரேஷன் பிரஞ்சு எஸ்யுவி முற்றிலும் திருத்தப்பட்ட எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியரில் புதிய இன்ஜின் விருபங்களிலும் வழங்கப்படும். இது 2024 இன் பிற்பகுதியில் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
எக்ஸ்டீரியரில், புதிய டஸ்டர் முரட்டுத்தனமாக செதுக்கிய போன்னெட்டை பெறுகிறது, சங்கி வீல் அர்ச்செஸ், பாடி கிளாடிங் மற்றும் ஃபங்ஷனல் ரூஃப் ரெயில்ஸ். முன்புறத்தில், Y- வடிவ எல்இடி உடன் கூடிய குரோம் இன்சர்ட்ஸைப் பெறுகிறது, புதிய மற்றும் ஸ்லீக் கிரில், ஃபாக் லைட்ஸ் மற்றும் முன்பக்கத்தில் பரந்த ஏர் இன்டெக் பம்பர். இது இப்போது டூயல்-டோன் மல்டி-ஸ்போக் அலோய் வீல்ஸில் கிடைக்கின்றன.
ரியரில், எக்ஸ்டென்டெட் ஸ்ப்ளிட் ரூஃப் ஸ்பாய்லர், ஒய்-வடிவ எல்இடியுடன் கூடிய டெயில்லைட்ஸ், புதிய பம்பர் மற்றும் டெயில்கேட் ஒரு மடிப்பு இருக்கின்றன. மற்ற சிறப்பம்சங்களில் ரியர் வைப்பர் உடன் கூடிய வாஷர், சில்வர் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் மற்றும் ஒரு வழக்கமான ரேடியோ ஆண்டெனாவை இது பெறும்.
இன்டீரியரில், புதுப்பிக்கப்பட்ட டஸ்டரின் கேபினில் புதிய டாஷ்போர்டு மற்றும் சென்டர் கன்சோலுடன் பெரிதும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது ஃபிலோட்டிங்க் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமின் மேலே ஏர்கான் வென்ட்ஸ், எச்விஏசி மற்றும் மீடியா கன்ட்ரோல்க்கு ஃபிசிக்கல் பட்டன், வயர்லெஸ் சார்ஜர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்டீயரிங் பொருத்தப்பட்டது கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஒரு திருத்தப்பட்ட கியர் செலக்டர் லெவர்.
இந்தியாவில் டஸ்டர் 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.2-லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் மோட்டார் மூலம் இயக்கப்படும். 1.3-லிட்டர் டர்போ-பெட்ரோல் ஃப்ளெக்ஸ் ஃப்யூல் இன்ஜினைப் பின்னர் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த எஸ்யுவி அறிமுகம் ஆனா பின்பு ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா,டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், எம்ஜி ஆஸ்டர், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஹோண்டா எலிவேட் மற்றும் சிட்ரோன் c3 ஏர்கிராஸ் உடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்