- இது டஸ்டரின் செவன் சீட்டர் வெர்ஷனாகும்
- இரண்டு இன்ஜின் விருப்பங்களுடன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
டாசியா பிக்ஸ்டர், ரெனோவின் டஸ்டர் எஸ்யுவியின் செவன் சீட்டர் வெர்ஷனாகும், சர்வதேச அளவில் அதன் முதல் பார்வையை உருவாக்கியுள்ளது. இந்த புதிய எஸ்யுவி 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் டஸ்டரின் ஃபைவ் சீட்டர் வெர்ஷனும் விரைவில் வழங்கப்படும்.
டிசைன் மற்றும் அம்சங்கள்
பிக்ஸ்டரின் வடிவமைப்பு டஸ்டரைப் போலவே இருக்கும், இதில் Y-வடிவ எல்இடி டிஆர்எல்கள், சங்கி வீல் ஆர்ச்கள் மற்றும் பாடி கிளாடிங் போன்ற டிசைன் உள்ளன. இதன் சி-பில்லரில் ரியர் டோர் ஹேண்டல்ஸ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்பு.
இன்டீரியரில் 10.1-இன்ச் ஃபிலோட்டிங்க் டச்ஸ்கிரீன், 10-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இன்ஜின் விருப்பங்கள்
சர்வதேச சந்தையில் பிக்ஸ்டருக்கு மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இது இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாசியா பிக்ஸ்டர் இந்தியாவில் மிட்-சைஸ் எஸ்யுவிகளுடன் போட்டியிடும், மேலும் இது பிரீமியம் செவன்-சீட்டர் காராக பார்க்கப்படுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்