அறிமுகம்:
ஹூண்டாய் சமீபத்தில் முற்றிலும் புதிய வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்புடன் வெர்னாவின் 2023 மறு செய்கையை அறிமுகப்படுத்தியது. செடானின் அறிமுக விலை ரூ. 10.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் டாப்-ஸ்பெக் டர்போ வேரியண்ட் ரூ. 17.38 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).உற்பத்தியாளர் ரூ.21,000 டோக்கன் தொகைக்கு எதிராக புக்கிங்ஸ்சையும் தொடங்கியுள்ளார் மற்றும் டெலிவரிஸும் தொடங்கியுள்ளன.
இப்போது, வெர்னா டர்போ முக்கிய போட்டி ஃபோக்ஸ்வேகன் வர்டஸ் ஜிடீயில் இருந்து வருகிறது. எனவே, இரண்டு செடான்ஸ்க்கு இடையிலான விரிவான விவரக்குறிப்பு, மாறுபாடு, அம்சங்கள் மற்றும் விலை ஒப்பீடு ஆகியவற்றைப் பார்க்கலாம்.
வேரியண்ட்ஸ்:
ஹூண்டாய் வெர்னா டர்போவை SX மற்றும் SX(O) என இரண்டு வேரியண்ட்ஸில் பரவலாகக் கொண்டிருக்கலாம். வாடிக்கையாளர்கள் சிக்ஸ் -ஸ்பீட் மேனுவல் அல்லது செவன்-ஸ்பீட் டிசிடீ யூனிட் இடையே தேர்வு செய்யலாம். மாறாக, ஃபோக்ஸ்வேகன் வர்டஸ் ஜிடீ ஆனது ஒற்றை, முழுமையாக ஏற்றப்பட்ட வேரியண்டில் கிடைக்கிறது.
இன்ஜின்:
ஹூண்டாய் வெர்னா டர்போவை 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் 158bhp மற்றும் 253Nm டோர்க் திறனை வழங்குகிறது. மோட்டார் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் அல்லது செவன்-ஸ்பீட் டிசிடீ உடன் இணைக்கப்பட்டுள்ளது. மறுபுறம், வர்டஸ் ஜிடீ ஆனது 1.5-லிட்டர் டீஎஸ்ஐ இவோ இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 148bhp/250Nm டோர்க் மற்றும் செவன்-ஸ்பீட் டிஎஸ்ஜி கியர்பாக்ஸுடன் பிரத்தியேகமாக இணைக்கப்பட்டுள்ளது. இரண்டு செடான்ஸும் இப்போது BS6 2.0-கம்ப்ளைன்ட் இன்ஜின்ஸுடன் வருகின்றது.
வெர்னா டர்போவின் சிக்ஸ்-ஸ்பீட் பெட்ரோல் மேனுவல் மற்றும் செவன்-ஸ்பீட் டிசிடீ வெர்ஷன்ஸ் முறையே லிட்டருக்கு 20 கி.மீ மற்றும் லிட்டருக்கு 20.6 கி.மீ என ஏஆர்ஏஐ-ன் கூறப்பட்ட ஃபியூல் திறன் எண்ணிக்கையை வழங்குவதாக ஹூண்டாய் கூறியுள்ளது. மறுபுறம், வர்டஸின் 1.5-லிட்டர் ஏடீ வேரியண்ட் லிட்டருக்கு 18.67 கி.மீ ஃபியூல் திறனைத் தருவதாகக் கூறப்படுகிறது.
ஃபீச்சர்ஸ்:
அம்சங்களைப் பொறுத்தவரை, வெர்னா டர்போ ஒரு புதிய 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரை அறிமுகப்படுத்துகிறது. இது முதல் பிரிவில் சுவிட்சேபல் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் க்ளைமேட் கண்ட்ரோலர் அதனுடன் ஃப்ரண்ட் வென்டிலேடெட் மற்றும் ஹீடெட் சீட்ஸ் ஆகியவற்றைப் பெறுகிறது. அதுமட்டுமின்றி, எலக்ட்ரோனிக்கலி அட்ஜஸ்ட்டெபல் டிரைவர் சீட், வாய்ஸ்-எனேபிள்ட் ஸ்மார்ட் எலக்ட்ரிக் சன்ரூஃப், கூல்டு க்ளவ்பாக்ஸ், பேடில் ஷிஃப்டர்ஸ் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் ஆகியவற்றைப் பெறுகிறது.
ஒப்பிடுகையில், ஃபோக்ஸ்வேகன் வர்டஸ் ஜிடீ ஆனது 10-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் திரையுடன் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகியவற்றுடன் எட்டு-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இது வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், லெதர்ரெட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் பார்க்கிங் சென்சார்ஸ் கொண்ட ரியர்-வியூ கேமரா ஆகியவற்றைப் பெறுகிறது.
சேஃப்டி:
ஹூண்டாய் வெர்னா டர்போவின் பாதுகாப்புத் தொகுப்பு, ஸ்பீட் சென்சிங் ஆட்டோ டோர் லாக்ஸ், இபிடி உடன் ஏபிஎஸ், எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், ஆட்டோமேடிக் ஹெட்லேம்ப்ஸ், எலக்ட்ரோனிக் பார்க்கிங் ப்ரேக், டீபீஎம்எஸ் மற்றும் எலக்ட்ரோனிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் போன்ற 65 மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும், இது ஹூண்டாயின் 17 ஸ்மார்ட்சென்ஸ் லெவெல் 2 ஏடாஸ் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ப்ளூலிங்க் -இணைக்கப்பட்ட கார் டெக்னாலஜியையும் பெறுகிறது.
ஃபோக்ஸ்வேகன் வர்டஸ், மறுபுறம், ஆறு ஏர்பேக்ஸ், மல்டி-கோலிஷன் ப்ரேக்ஸ், ஒரு ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் எலக்ட்ரோனிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சமீபத்தில், வர்டஸ் ஆனது க்ளோபல் என்காப் க்ராஷ் டெஸ்டில் ஃபைவ்-ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்றது.
ப்ரைசிங்:
ஹூண்டாய் வெர்னா டர்போவை அறிமுக விலையில் ரூ. 14.83 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) SX மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்டிற்கு மற்றும் ரூ.17.38 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) SX(O) செவன்-ஸ்பீட் டிசிடீ வேரியண்ட்டிற்கு செல்கிறது.
மறுபுறம், ஃபோக்ஸ்வேகன் சமீபத்தில் அதன் போர்ட்ஃபோலியோ முழுவதும் விலைகளை திருத்தியது மற்றும் செடானின் ஜிடீ வேரியண்ட் இப்போது ரூ. 18.57 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).
மொழிபெயர்த்தவர்: பவித்ரா மதியழகன்