- பெரியோர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 5-ஸ்டார் ரேட்டிங்
- இந்தியாவில் ஆரம்ப விலை ரூ. 10.96 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
ஹூண்டாயின் சமீபத்திய செடான், வெர்னா, ஜிஎன்கேப்பின் சேஃப்டி டெஸ்ட் நெறிமுறைகளின் கீழ் சோதிக்கப்பட்டது மற்றும் ஃபைவ்-ஸ்டார் க்ளோபல் என்கேப் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றது. டெஸ்ட் யூனிட்டில் ஆறு ஏர்பேக்ஸ், சீட்பெல்ட் ப்ரீ-டென்ஷனர் மற்றும் லோட் லிமிட்டர், சீட்பெல்ட் ரிமைன்டர், இஎஸ்சி மற்றும் ரியர் ஐசோஃபிக்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
ஹோண்டா சிட்டி-போட்டியாளரான நிறுவனம் பெரியோர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு டெஸ்ட்டில் முறையே 34க்கு 28.18 புள்ளிகள் மற்றும் 49க்கு 42 புள்ளிகள்ளை பெற்றது. மேலும், வாகனத்தின் பாடி ஷெல் மற்றும் ஃபுட்வெல் பகுதி நிலையற்றதாகவும், மேலும் ஏற்றுவதைத் தாங்கும் திறன் இல்லாததாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
தற்போது, வெர்னா நான்கு வேரியண்ட்ஸில் வழங்கப்படுகிறது-EX, S, SX மற்றும் SX(O), இதைஇரண்டு இன்ஜின் விருப்பங்களில் பெறலாம். நாட்டில் செடான் காரின் விலை ரூ. 10,96,500 மற்றும் டாப்-ஸ்பெக் வேரியண்ட்டிற்கு ரூ. 17,37,900 (அனைத்து விலைகள், எக்ஸ்-ஷோரூம்) வாடிக்கையாளர்கள் ஏழு மோனோடோன் மற்றும் இரண்டு டூயல்-டோன் வண்ண விருப்பங்களிலிருந்து தேர்வு செய்யலாம்.
ஹூண்டாய் வெர்னா இரண்டு பெட்ரோல் மோட்டார்ஸில் வழங்குகிறது - 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரெடெட் மற்றும் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின். என்ஏமில் 113bhp மற்றும் 144Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது, அதே நேரத்தில் டர்போ-பெட்ரோல் 158bhp மற்றும் 253Nm டோர்க்கை வெளியிடுகிறது. முந்தையது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது, பிந்தையது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் அல்லது செவன்-ஸ்பீட் டிசிடீ கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்