- இந்தியாவில் வென்யூவின் ஆரம்ப விலை ரூ. 7.94 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
- சமீபத்தில் எக்ஸிகியூட்டிவ் எம்டீ வேரியன்ட் அறிமுகப்படுத்தப்பட்டது
மார்ச் மாதத்தில் ஹூண்டாய் இந்தியா தனது கார்களில் காத்திருப்பு காலம் குறித்து வெளியிட்டுள்ளது. இந்தக் கட்டுரையில், வென்யூ சப்-ஃபோர் மீட்டர் எஸ்யுவியின் காலவரிசையைப் பார்ப்போம்.
மார்ச் 2024 முதல் ஹூண்டாய் வென்யூவின் என்ட்ரி லெவல் பெட்ரோல் E எம்டி வேரியன்ட்க்கு 12 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும். அதே நேரத்தில், டீசல் வேரியன்ட்ஸ்ஸை வீட்டிற்கு எடுத்துச் செல்ல நினைக்கும் வாடிக்கையாளர்கள் 10 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும், அதே நேரத்தில் பெட்ரோல் வேரியன்ட்ஸ்க்கு ஆறு வாரங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த காலக்கெடு நாடு முழுவதும் பொருந்தும்.
மார்ச் 31 வரை ஹூண்டாய் வென்யூவில் ரூ. 30,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், இந்த மாத தொடக்கத்தில், வாகன உற்பத்தியாளர் டர்போ-பெட்ரோல் ரேஞ்சின் புதிய எக்ஸிகியூட்டிவ் எம்டீ வேரியன்ட்டை அறிமுகப்படுத்தியது, இதன் விலை ரூ. 10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்