- ஸ்மார்ட் எலக்ட்ரிக் சன்ரூஃபை பெறுகிறது
- மேனுயல் டிரான்ஸ்மிஷனில் மட்டுமே வழங்கப்படுகிறது
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL) வென்யூவின் புதிய S+ வேரியன்ட்டை ரூ. 9.35 லட்சத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் புதிதாக ஸ்மார்ட் எலக்ட்ரிக் சன்ரூஃப் சேர்க்கபட்டுள்ளது.
புதிய வென்யூ S+ வேரியன்ட்டில், ஸ்மார்ட் எலக்ட்ரிக் சன்ரூஃப், கலர்ட் டிஎஃப்டி மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே (MID) கொண்ட டிஜிட்டல் க்ளஸ்டர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ / ஆப்பிள் கார்ப்ளே, ரியர் ஏசி வென்ட்ஸ், ரூஃப் ரெயில்ஸ் மற்றும் எட்டு-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. பாதுகாப்பை முன்னணியில் வைத்து, ஹூண்டாய் வென்யூ S+ வேரியன்ட் 6 ஏர்பேக்குகள், டிபிஎம்எஸ் ஹைலைன், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்ஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC), ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கன்ட்ரோல் (HAC) மற்றும் பல பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
இந்த புதிய வேரியன்ட்டில் 1.2 லிட்டர் என்ஏ கப்பா பெட்ரோல் இன்ஜின் உள்ளது, இது 82bhp/114Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது. மேலும் இது வெறும் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே கிடைக்கும். இந்த சன்ரூஃப் வெர்ஷன், வழக்கமான S (O) வேரியன்ட் விட ரூ. 11,000 அதிக விலையில் உள்ளது.