- தற்போது உள்ள மாடலில் சன்ரூஃப் உள்ளது
- மேனுவல் கியர்பாக்ஸுடன் வழங்கப்படும்
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL) வென்யூவின் புதிய S(O)+ வேரியன்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் எலக்ட்ரிக் சன்ரூஃப் உள்ளது. இந்த வேரியன்ட் S(O) வெர்ஷனிலிருந்து அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது மற்றும் இதில் புதிய அம்சங்கள் எதுவும் புதிதாக சேர்க்கப்படவில்லை.
புதிய ஹூண்டாய் வென்யூ S(O)+ வேரியண்ட்டில், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே உடன் எட்டு இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் எலக்ட்ரிக் சன்ரூஃப் (பனோரமிக் இல்ல) பெறுகிறது. இது எல்இடி டிஆர்எல்ஸ், எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவற்றைப் பெறுகிறது. பாதுகாப்பிற்காக, ரியர் கேமரா, ஆறு ஏர்பேக்குகள், டிபிஎம்எஸ், இஎஸ்சி, ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல் மற்றும் பல அம்சங்களை உள்ளடக்கியது.
வென்யூ S(O)+ இன்ஜின் விவரங்கள்:
இந்த புதிய வேரியன்ட்டில் 1.2 லிட்டர் என்ஏ கப்பா பெட்ரோல் இன்ஜின் உள்ளது, இது மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. டர்போ-பெட்ரோல் S(O) வேரியன்ட்டும் இந்த புதுப்பிப்பைப் பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்