- இரண்டு இன்ஜின் விருப்பங்களில் வழங்கப்படுகிறது
- டூயல் கேமராஸ் கொண்ட டேஷ்கேம்மை பெறும்
ஹூண்டாய் இந்தியா வென்யூவின் க்நைட் எடிஷன்னை நாட்டில் ரூ.9,99,990 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எஸ்யுவியின் ஸ்பெஷல் எடிஷன் S(O) மற்றும் SX(O) வேரியண்ட்ஸின் அடிப்படையாகக் கொண்டது மற்றும் இரண்டு இன்ஜின் விருப்பங்களில் கிடைக்கும். இந்த எஸ்யுவி அதன் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டிலிருந்து எவ்வாறு வேறுபடிகின்றது என்பதை இதில் பார்ப்போம்.
வென்யூ க்நைட் எடிஷனின் சிறப்பம்சங்கள்
ஸ்டைலிங்கைப் பொறுத்தவரை, ஹூண்டாய் லோகோவுடன் கூடிய பிளாக் நிற ஃப்ரண்ட் கிரில், ப்ராஸ் இன்சர்ட்ஸ் பூசப்பட்ட பிளாக் வண்ணம் ரூஃப் ரெயில்ஸ், ரெட் ஃப்ரண்ட் ப்ரேக் காலிப்பர்ஸ் கொண்ட பிளாக் அலோய் வீல்ஸ், பாடி கலர்ட் டோர் ஹேண்டல்ஸ் மற்றும் 'நைட்' பேட்ஜ் ஆகியவற்றை வென்யூவின் ஸ்பெஷல் எடிஷனில் பெறுகிறது.
இன்டீரியரை பொறுத்தவரை, வென்யூ நைட் எடிஷனின் கேபின், ப்ராஸ் இன்சர்ட்ஸ் உடன் பிளாக் இன்டீரியர் தீம், டூயல் கேமராஸ் கொண்ட டேஷ்கேம், ஸ்போர்ட்டி மெட்டல் பெடல்ஸ், 3d ஃப்ளோர் மேட்ஸ் மற்றும் ப்ராஸ் ஹைலைட்ஸுடன் பிளாக் சீட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றுடன் வருகிறது.
ஹூண்டாய் வென்யூ க்நைட் எடிஷன் நிறங்கள்
வாடிக்கையாளர்கள் நான்கு மோனோடோன் மற்றும் ஒரு டூயல்-டோன் வண்ண விருப்பத்திலிருந்து ஸ்பெஷல் எடிஷனைத் தேர்வு செய்யலாம். மோனோடோன் ஷேட்ஸில் அபிஸ் பிளாக், அட்லஸ் ஒயிட், டைட்டன் க்ரே மற்றும் ஃபையரி ரெட் ஆகியவை அடங்கும். அதே டூயல் டோனில், அபிஸ் பிளாக் உடன் ஃபையரி ரெட் அடங்கும்.
வென்யூ க்நைட் எடிஷன் இன்ஜின் விவரங்கள்
வென்யூவின் நைட் எடிஷன் இரண்டு இன்ஜின் விருப்பங்களில் வழங்கப்படுகிறது - 1.2-லிட்டர் கப்பா பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின். முந்தையது S(O) மற்றும் SX வேரியண்ட்ஸில் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இருக்கலாம், SX (O) வேரியண்ட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் வென்யூ நைட் எடிஷன் விலை
இன்ஜின் | வேரியண்ட்ஸ் | எக்ஸ்-ஷோரூம் விலைகள் |
1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல் | S(O) எம்டீ | ரூ. 9,99,990 |
SX எம்டீ | ரூ. 11,25,700 | |
SX எம்டீ டூயல் டோன் | ரூ. 11,40,700 | |
1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் | SX(O) எம்டீ | ரூ. 12,65,100 |
SX(O) எம்டீ டூயல் டோன் | ரூ. 12,80,100 | |
SX(O) டிசிடீ | ரூ. 13,33,100 | |
SX(O) டிசிடீ டூயல் டோன் | ரூ. 13,48,100 |
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்