- சில காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் வரும்
- இரண்டு இன்ஜின் விருபங்களில் பெறலாம்
சமீபத்தில் ஹூண்டாய் தனது வென்யூவின் க்நைட் எடிஷனை இந்தியாவில் ரூ. 9.99 லட்சம் முதல் ரூ. 13.4 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) விலையில் லான்ச் செய்தது. இது ஸ்டாண்டர்ட் வென்யூ வெர்ஷன்னை அடிப்படையாகக் கொண்டது மற்றும் சமீபத்தில் இதன் எக்ஸ்டீரியர் ஃபோட்டோஸில் சில காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் காணப்பட்டது. இந்த கட்டுரையில் நாங்கள் இதன் இன்டீரியரில் உள்ள மாற்றங்களை எழுதி உள்ளோம்.
ஹூண்டாய் வென்யூ க்நைட் எடிஷன் இன்டீரியர் ஃபோட்டோஸ்
எக்ஸ்டீரியர் போலவே, அதன் கேபினும் முற்றிலும் பிளாக் வண்ணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, டாஷ்போர்டு டிசைன், சீட்டிங் லேஅவுட், எக்யூப்மெண்ட் மற்றும் பிற அம்சங்கள் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்ஸ் போலவே கொடுக்கப்பட்டுள்ளன.
க்நைட் எடிஷன், ப்ராஸ் வண்ண இன்சர்ட்ஸுடன் பிளாக் சீட் அப்ஹோல்ஸ்டரியை பெறுகிறது. இந்த ப்ராஸ் இன்சர்ட் மெட்டல் பெடல்ஸில் காணலாம் மற்றும் 3டி டிசைனர் மேட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன.
அதன் அனைத்து அம்சங்களும் வென்யூவின் ஸ்டாண்டர்ட் வேரியண்ட் போலவே இருக்கும். இருப்பினும், க்நைட் எடிஷன் டூயல் கேமராஸ் மற்றும் எலக்ட்ரோக்ரோமிக் ஐஆர்விஎம்ஸ் கொண்ட டேஷ்கேமுடன் வருகிறது.
ஹூண்டாய் வென்யூ க்நைட் எடிஷன் இன்ஜின் விவரங்கள்
வென்யூ க்நைட் எடிஷன் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது, இது 82bhp பவர் மற்றும் 114Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது. இது ஃபைவ் ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் வருகிறது. மறுபுறம், 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினும் உள்ளது, இது 118bhp மற்றும் 172Nm டோர்க்கையும் உருவாக்குகிறது. டர்போ-பெட்ரோல் இன்ஜின் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் அல்லது செவன்-ஸ்பீட் டிசிடீ உடன் இணைக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்