- S (O) மற்றும் SX (O) வேரியண்ஸுடன் கிடைக்கிறது
- ஸ்பெஷல் எடிஷனின் விலை ரூ.10 லட்சம்
ஹூண்டாய் இந்தியா வென்யூ க்நைட் எடிஷனை 18 ஆகஸ்ட் 2023 அன்று நாட்டில் அறிமுகப்படுத்தியது. வென்யூவின் ஸ்பெஷல் எடிஷன் S (O) மற்றும் SX (O) வேரியண்ட்ஸில் ரூ. 10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இப்போது, அதன் அறிமுகத்திற்குப் பிறகு, வென்யூவின் க்நைட் எடிஷன் இந்தியா முழுவதும் உள்ள டீலர்ஷிப்ஸை அடையத் தொடங்கியுள்ளது.
வென்யூ க்நைட் எடிஷனின் எக்ஸ்டீரியர் என்ன வெளிப்படுத்துகிறது?
எக்ஸ்டீரியர் ஸ்டைலிங்கைப் பொறுத்தவரை, க்நைட் எடிஷன் பிளாக்-அவுட் ஹூண்டாய் லோகோ உடன் பிளாக் நிற ஃப்ரண்ட் கிரில்லைப் பெறுகிறது, பிளாக் தீம் கொண்ட ப்ராஸ் இன்சர்ட்ஸுடன் கூடிய ரூஃப் ரெயில்ஸ், ரெட் ப்ரேக் காலிப்பர்ஸ் கொண்ட பிளாக்-அவுட் அலோய் வீல்ஸ் மற்றும் டெயில்கேட்டில் 'க்நைட்' எடிஷன் பேட்ஜ் உள்ளது. .
ஹூண்டாய் வென்யூ க்நைட் எடிஷன் இன்டீரியர் மாற்றங்கள் ஏதேனும் உள்ளதா?
இன்டீரியரில், ஸ்டாண்டர்ட் ட்ரிமில் உள்ள மாற்றங்களில் பல்வேறு இடங்களில் ப்ராஸ் இன்சர்ட்ஸுடன் கூடிய பிளாக் இன்டீரியர் தீம், டூயல் டேஷ் கேமரா, 3D ஃப்ளோர் மேட்ஸ், மெட்டல் பெடல்ஸ் மற்றும் ப்ராஸ் அக்ஸ்ன்ட்ஸுடன் கூடிய பிளாக் சீட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவை அடங்கும்.
வென்யூ க்நைட் எடிஷனின் வண்ண விருப்பங்கள்
படத்தில் காணப்படுவது போல், வென்யூ க்நைட் எடிஷன் அட்லஸ் ஒயிட் நிறத்தில் முடிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இது அபிஸ் பிளாக், டைட்டன் க்ரே, ஃபையரி ரெட் மற்றும் ஃபையரி ரெட் உடன் அபிஸ் பிளாக் ரூஃப் எக்ஸ்டீரியர் வண்ண விருப்பங்களுடனும் இருக்கலாம்.
இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்
க்நைட் எடிஷன் வென்யூ ஆனது இரண்டு இன்ஜின் விருப்பங்களுடன் வழங்கப்படுகிறது - 1.2-லிட்டர் என்ஏ பெட்ரோல் மற்றும் 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின். என்ஏ பெட்ரோல் SX (O) வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது, டர்போ-பெட்ரோல் S (O) மற்றும் SX (O) ட்ரிம்ஸில் பொருத்தப்பட்டுள்ளது. அதிக சக்தி வாய்ந்த டர்போ-பெட்ரோல் மோட்டார் 118bhp மற்றும் 172Nm டோர்க்கை உற்பத்தி செய்யும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் செவன்-ஸ்பீட் டிசிடீ கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்