- வென்யூ சிக்ஸ் ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனைப் பெறுகிறது
- இந்த ஆண்டு வென்யூ அப்டேட்டுக்கு பிறகு ஐஎம்டீ வெர்ஷன் நிறுத்தப்பட்டது
நிறுத்தப்பட்ட ஹூண்டாய் வென்யூ ஐஎம்டீ
ஹூண்டாய் இந்தியா இந்த மாத தொடக்கத்தில் நாட்டில் 2023 வென்யூவை அறிமுகப்படுத்தியது, இதன் விலை ரூ. 10.32 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). கார் தயாரிப்பாளர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் விருப்பத்தை மீண்டும் கொண்டு வந்தனர், இதனால் ஐஎம்டீ வேரியண்ட்ஸை நிறுத்தியது.
இடம் ஐஎம்டீ வேரியண்ட் விவரங்கள்
ஹூண்டாய் வென்யூ ஐஎம்டீஆனது S(O) 1.0 டர்போ, SX(O) 1.0 டர்போமற்றும் SX(O) 1.0 டர்போ டூயல்-டோன் ஆகிய மூன்று வேரியண்ட்ஸில் முன்பு வழங்கப்பட்டது. இந்த வேரியண்ட்ஸ் இப்போது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கின்றன. முன்பு டிசிடீ யூனிட்டுடன் மட்டுமே விற்கப்பட்ட வென்யூ என்-லைன், N6, N8 மற்றும் N8 டூயல்-டோன் வேரியண்ட்ஸில் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனையும் பெறுகிறது.
ஹூண்டாய் இந்தியாவின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்
கடந்த வாரம், ஹூண்டாய் நாட்டில் i20 ஃபேஸ்லிஃப்ட்டை அறிமுகப்படுத்தியது, இதன் விலை ரூ. 6.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இது உள்ளே பல புதுப்பிப்புகளைப் பெற்றுள்ளது மற்றும் இப்போது 1.2-லிட்டர் என்ஏ பெட்ரோல் மோட்டாருடன் மட்டுமே வழங்கப்படுகிறது. 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் மில் வரும் மாதங்களில் மீண்டும் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்