- ஹூண்டாய் வெர்னா ஆறு ஏர்பேக்கை ஸ்டாண்டர்ட் ஆக பெறும் முதல் மாடல் ஆகும்
- வெர்னா ஜிஎன்கேப்பில் ஃபைவ்-ஸ்டார் ரேட்டிங்கை பெற்றது
ஹூண்டாய் இந்தியா தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த உறுதி படுத்தியுள்ளது மற்றும் அதன் போர்ட்ஃபோலியோ முழுவதும் ஆறு ஏர்பேக்ஸை ஸ்டாண்டர்ட் ஆக அறிமுகப்படுத்துவதன் மூலம் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது, எக்ஸ்டர், i20, i20 N லைன், வெர்னா, க்ரெட்டா, தூக்ஸன் மற்றும் ஐயோனிக் 5 ஆகிய மாடல்ஸ் அனைத்து வேரியண்ட்ஸிலும் ஆறு ஏர்பேக்ஸை வழங்குகின்றன.
இந்த அறிவிப்பைப் பற்றி எம்டி மற்றும் சிஇஓ, உன்சோ கிம் கருத்துத் தெரிவிக்கையில், ' ஹூண்டாய் இல் 'அனைவருக்கும் பாதுகாப்பு' என்பது எங்கள் அதிகபட்ச முன்னுரிமையாகும், மேலும் வாகன பாதுகாப்பு அம்சங்களை தரப்படுத்துவதில் நாங்கள் சிறந்தவர்களாக இருந்து வருகிறோம். இப்போது, அனைத்து மாடல்ஸ் மற்றும் அனைத்து வேரியண்ட்ஸிலும் ஆறு ஏர்பேக்ஸின் அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் ஸ்மார்ட் மொபிலிட்டி தீர்வுகளை வழங்குபவர் மட்டுமல்ல, பாதுகாப்பான மொபிலிட்டி தீர்வுகளையும் வழங்குகிறோம். இந்தியாவில் வாகனப் பாதுகாப்புத் தரத்தை உயர்த்துவதில் எச்எம்ஐஎல் தொடர்ந்து முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும், இதனால் இந்திய சாலைகள் அனைவருக்கும் பாதுகாப்பானதாக இருக்கும்.
ஹூண்டாய் வெர்னா ஜிஎன்கேப் கிராஷ் டெஸ்ட்டில் முழு ஃபைவ்-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்றுள்ளது. சோதனை மாடலில் ஆறு ஏர்பேக்ஸ், சீட்பெல்ட் ப்ரீ-டென்ஷனர், லோட் லிமிட்டர், சீட்-பெல்ட் ரிமைன்டர், இஎஸ்சி மற்றும் ரியர் ஐசோஃபிக்ஸ் ஆகியவை இதில் பொருத்தப்பட்டிருந்தது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்