- ஹூண்டாய் இவி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான திட்டங்களின் ஒரு பகுதி
- 10 ஆண்டுகளில் ரூ. 20,000 கோடி முதலீடு செய்ய திட்டம்
ஹூண்டாய் இந்தியா ஒரு நிலையான இவி சுற்றுச்சூழலை மேம்படுத்த தமிழ்நாட்டில் ரூ.20,000 கோடி முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது. மேலும், இந்நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது, அங்கு மேற்கூறிய தொகை படிப்படியாக 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படும்.
ஹூண்டாய், எலக்ட்ரிக் இயக்கத்தை நோக்கி மாநிலத்தை மாற்றுவதற்கான நிலையான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான தமிழக அரசின் பார்வைக்கு ஒரு செயல்தந்திர துணையாக இருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனடிப்படையில், பிராண்ட் ஆண்டுக்கு 1.78 லட்சம் பேட்டரிஸ் கபாஸிட்டி கொண்ட பேட்டரி பேக் அசெம்பிளி யூனிட்டை அமைக்கும்.
அதே நேரத்தில், ஹூண்டாய் இந்தியா ஐந்து ஆண்டுகளில் முக்கிய ஹைவேஸில் முக்கிய இடங்களில் 100 இவி சார்ஜிங் ஸ்டேஷன்ஸை இன்ஸ்டால் செய்யும். இதில் ஐந்து டூயல் ஹை-ஸ்பீட் சார்ஜிங் ஸ்டேஷன்ஸ் (DC 150 kW + DC 60 kW), 10 சிங்கள் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்ஸ் (DC 150 kW), மற்றும் 85 சிங்கள் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்ஸ் (DC 60 kW) ஆகியவை அடங்கும்.
மேலும், ஹூண்டாய் நிறுவனம், மொத்த உற்பத்தி அளவை ஆண்டுக்கு 8.50 லட்சம் யூனிட்ஸாக அதிகரிக்கவும், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது ஃபேக்டரியில் இருந்து புதிய எலக்ட்ரிக் மற்றும் ஐசிஇ வாகனங்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. கூடுதலாக, இது வரும் ஆண்டுகளில் எதிர்கால நிலையான டெக்னாலஜிஸை தொடர்ந்து ஆராயும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்