- 2026 இல் இந்தியாவுக்கு வர வாய்ப்புள்ளது
- கியா EV9 இல் உள்ள அதே இன்ஜின் மற்றும் பிளாட்ஃபார்மிலிருந்து வருகிறது
டூ-ரோ எலக்ட்ரிக் கார்களான கோனாஎலக்ட்ரிக்மற்றும் ஐயோனிக் 5 ஆகியவை ஹூண்டாய் நிறுவனத்திடமிருந்து இதுவரை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வாகன உற்பத்தியாளர் த்ரீ-ரோ எலக்ட்ரிக் எஸ்யுவிகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, த்ரீ-ரோ எலக்ட்ரிக் எஸ்யுவி இந்த ஆண்டின் இறுதியில் களத்தில் நுழையும். ஐயோனிக் கான்செப்ட் செவன் இந்த ஆண்டு உற்பத்திக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், முதலில் அமெரிக்காவில் அறிமுகமான பிறகு உலகெங்கிலும் உள்ள பல்வேறு இடங்களில் இது கிடைக்கும்.
செவன் கான்செப்ட் சில்ஹவுட் 2021 இல் காட்டப்பட்ட EV9 கான்செப்ட் காரின் உள்ளேயும் வெளியேயும் அதே டைமென்ஷன்ஸை பகிர்ந்து கொள்கிறது. ப்ரொடக்ஷன்-ரெடி மாடலில் கர்வ்ட் எலிமெண்ட்ஸ் கூடிய வழக்கமான, பாக்ஸி வடிவ டிசைன் எலிமெண்ட்ஸ் உள்ளன, ஹூண்டாய் தற்போது அதன் சிறந்த எஸ்யுவிகளில் இதை வழங்குகிறது.
ஹூண்டாய்-கியா யுனிவெர்ஸில் EV9 உடன் கான்செப்ட் செவன் அதன் பெரும்பாலான இன்ஜின், ஃபீச்சர்ஸ் மற்றும் நடைமுறைத் தன்மையைப் பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம். EV9 போலவே, இது 6-சீட்டர் மற்றும் 7-சீட்டர் கட்டமைப்புகளில் வழங்கப்படும். இருப்பினும், உலகளாவிய மூத்த பிராண்டான ஹூண்டாய், EV9 காருடன் ஒப்பிடும்போது 6-சீட்டர் கொண்ட வேரியன்ட்ஸுடன் வர வாய்ப்புள்ளது.
மற்ற பெரிய செய்தி என்னவென்றால், இது அதிகாரப்பூர்வமாக இல்லாவிட்டாலும், செவன் கான்செப்ட் ஐயோனிக் 9 என்று அழைக்கப்படும், மேலும் ஹூண்டாய் வரிசையின் மேல் அதன் இடத்தைப் பிடிக்கும். எதிர்காலத்தில் ஹூண்டாய் நிறுவனம் வழங்கும் கார்களின் ஒரு பகுதியாக இந்த கார் கொண்டு வரப்படும் என்று நினைக்கிறோம். அதேபோல், இந்த கார் ரூ. 90 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் சிபியுமாடலைப் போலவே தனித்துவ அடையாளத்துடன் வரும். செவன் கான்செப்ட் ஹூண்டாய் இந்தியாவின் எதிர்கால வரிசையின் ஒரு பகுதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் 2026 இல் இந்தியாவிற்கு வரும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்