- ஹூண்டாய் இந்தியாவில் மூன்று சிஎன்ஜி கார்களை வழங்குகிறது
- டூயல் சிஎன்ஜி டேங்க் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஹூண்டாய் தனது சிஎன்ஜி கார்களின் புதிய வெர்ஷன்க்கு இரண்டு பெயர்களை ரெஜிஸ்டர் செய்துள்ளது. இவை 'ஹை-சிஎன்ஜி' மற்றும் 'ஹை-சிஎன்ஜி டுஓ என்று அழைக்கப்படும். தற்போதுள்ள இந்த கார்களில் சிங்கிள் மற்றும் ட்வின் சிலிண்டர் சிஎன்ஜி டேங்குகள் இருக்கலாம்.
தற்போது, ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் i10 நியோஸ், ஆரா மற்றும் எக்ஸ்டர் கார்கள் ஒரே சிஎன்ஜி டேங்குடன் கிடைக்கின்றன. இவை விரைவில் டூயல் டேங்க்கு மாற்ற முடியும்.
டாடா மோட்டார்ஸ் அதன் டியாகோ, டிகோர் மற்றும் பஞ்ச் மாடல்களில் டூயல் சிலிண்டர் சிஎன்ஜி டேங்கை வழங்கியுள்ளது. மேலும், அதன் அல்ட்ரோஸ் மாடலும் இந்த அம்சத்துடன் வருகிறது. ஆனால், தற்போது ஹூண்டாய் i20 யில் சிஎன்ஜி வெர்ஷன் இல்லை.
டாடா மோட்டார்ஸ் சந்தையில் சிஎன்ஜியின் ட்வின் சிலிண்டர் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது மற்றும் டியாகோ மற்றும் டிகோரில் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் கொடுத்து முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஹூண்டாயின் புதிய முயற்ச்சி டாடாவின் இந்த நடவடிக்கைக்கு விடையாக இருக்கலாம். விரைவில் ஹூண்டாய் சிஎன்ஜி கார்களில் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனும் இருக்கலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்