- மொத்தமாக 71,435 யூனிட்ஸை விற்பனை செய்தது
- ஹூண்டாய் எக்ஸ்டர் 65,000 முன்பதிவுகளைப் பெற்றுள்ளது
ஆகஸ்ட் 2023 க்கான விற்பனை புள்ளிவிவரங்களை வெளியிட்டது, நிறுவனம் மொத்தம் 71,435 யூனிட்ஸை விற்றுள்ளதாகவும், இதில் 53,830 யூனிட்ஸ் உள்நாட்டு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்டர்நேஷனல் மார்க்கெட்டில் 17,605 யூனிட்ஸை விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த பிராண்ட் கடந்த ஆண்டு 49,510 யூனிட்ஸை விற்றுள்ளது, இது ஆண்டு-ஆண்டிற்கான விற்பனையில் 8.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஹூண்டாய் இந்தியா சமீபத்தில் வென்யூ க்நைட் எடிஷனை ரூ. 10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்பெஷல் எடிஷன் இரண்டு இன்ஜின் விருப்பங்களுடன் மூன்று வேரியண்ட்ஸில் கிடைக்கிறது மற்றும் ப்ராஸ் இன்சர்ட்ஸுடன் பிளாக்-அவுட் எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியர் வண்ணத்தில் கிடைக்கின்றன.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்டின் சிஓஓ தருண் கார்க் கூறுகையில், 'ஹூண்டாய் மோட்டார்ஸ் 71,435 யூனிட்ஸை விற்பனை செய்துள்ளது, இது வாடிக்கையாளர்க்கு எங்கள் தயாரிப்புகளை விரும்புவதைக் காட்டுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் எஸ்யுவிகள் விற்பனையில் 60 சதவீதம் பங்களிப்பை பெற்றது’ என்று கூறினார்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்