- ஒரு ஒரு ஆண்டிற்கும் 14.91 சதவீதம் வளர்ச்சியை எட்டியது
- ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் வென்யூ விற்பனை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது
மே 2023 இல் ஹூண்டாய் விற்பனை:
சவுத் கொரியன் கார் உற்பத்தியாளரான ஹூண்டாய், 2023 மே மாதத்திற்கான அதன் விற்பனை எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. நிறுவனம் மொத்தம் 59,601 யூனிட்ஸை விற்பனை செய்துள்ளது, இதில் 48,601 டொமெஸ்டிக் யூனிட்ஸ் மற்றும் எக்ஸ்போர்ட்க்கு 11,000 யூனிட்ஸ் மே 2023 இல் செய்யப்பட்டது.
மே 2022 இல் ஹூண்டாய் விற்பனை:
ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு இதே மாதத்தில் கார் தயாரிப்பாளரின் ஒட்டுமொத்த விற்பனை 51,263 ஆக இருந்தது. இதில் டொமெஸ்டிக் 42,293 யூனிட்ஸ் விற்பனையும், எக்ஸ்போர்ட்க்கு 8,970 யூனிட்ஸும் அடங்கும். சராசரியாக, ஒரு ஒரு ஆண்டிற்கும் ஹூண்டாய் 16.26 சதவிகிதம் வளர்ச்சியைக் கண்டுள்ளது.
ஹூண்டாய் எக்ஸ்டர் லான்ச் தேதி மற்றும் முன்பதிவுகள்:
நாட்டில் அதன் தற்போதைய போர்ட்ஃபோலியோவைத் தவிர, கார் தயாரிப்பாளர் அதன் வரவிருக்கும் எஸ்யுவியான எக்ஸ்டரை ஜூலை 2023 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. எக்ஸ்டர் ஏழு வேரியண்ட்ஸிலும் இரண்டு பவர்ட்ரெயின் விருப்பங்களிலும் வழங்கப்படும். இந்த எஸ்யுவி’க்கான முன்பதிவுகளைடோக்கன் தொகை ரூ.11,000 இல் தொடங்கியுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிக்கை:
மே 2023 விற்பனையைப் பற்றி கருத்து தெரிவிக்கையில், “எங்கள் ப்ளோக்பஸ்டர் எஸ்யுவிகளான ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் ஹூண்டாய் வென்யூ மூலம் 2023 மே மாதத்திற்கான ஆரோக்கியமான இரட்டை இலக்க விற்பனை வளர்ச்சியை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நியூ ஹூண்டாய் வெர்னா மீண்டும் பலமான எண்ணிக்கையை பெற்றுள்ளது, அதே நேரத்தில் எங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எஸ்யுவியான ஹூண்டாய் எக்ஸ்டர், எஸ்யுவி துறையில் வாடிக்கையாளர்களின் இடையில் உற்சாகத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.”
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்