- இந்தியாவில் உள்ள 36 இவி டீலர்ஷிப்ஸில் டிசி ஃபாஸ்ட் சார்ஜர்ஸை நிறுவுவதற்குள்ளது
- மேலும் 120kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர்ஸையும் நிறுவுவது குறித்து கருதுகின்றனர்
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (எச்எம்ஐஎல்) இந்தியாவில் அதன் சார்ஜிங் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்காக ஷெல் இந்தியாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ளது. இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதில் குறிப்பிடத்தக்க படியாக, நாட்டில் உள்ள 36 இவி டீலர்ஷிப்ஸில் டிசி ஃபாஸ்ட் சார்ஜர்ஸை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஹரியானாவின் குருகிராமில் உள்ள எச்எம்ஐஎல் இன் தலைமையகத்தில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஜே வான் ரியூ மற்றும் ஷெல் இந்தியாவின் இயக்குனர் சஞ்சய் வர்கி ஆகியோர் முன்னிலையில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா மற்றும் ஷெல் இந்தியா இடையே எம்ஓஏ கையெழுத்தியுள்ளார். இந்தியாவில் பிஇவி'க்கான சார்ஜிங் உள்கட்டமைப்பை விரிவாக்குவதை இந்த செயல்தந்திர கூட்டாண்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் எம்டி & சிஇஓ திரு. என்சூ கிம், “வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அமைப்பாக, நாங்கள் வாடிக்கையாளர்களின் வசதியை மேம்படுத்தவும், அரசாங்கத்தின் தூய்மையான இயக்கம் என்ற பார்வையை ஆதரிக்கும் செயல்தந்திர கூட்டாண்மைகளை தொடரவும் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். இந்தியாவில் ஹூண்டாய் இவி சுற்றுச்சூழலை மேலும் விரிவுபடுத்தவும், எங்களின் பிஇவி சார்ஜிங் நெட்வொர்க்கை மேம்படுத்தவும் ஷெல் இந்தியா உடனான எங்கள் கூட்டாண்மையை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கார்பன் நடுநிலைமை என்ற தேசிய இலக்கை அடைய வாடிக்கையாளர்களால் எலக்ட்ரிக் வாகனங்களை ஏற்றுக்கொள்வதை விரைவுபடுத்துவதில் இத்தகைய செயல்தந்திர கூட்டாண்மை அடிப்படையாகும். எச்எம்ஐஎல் டீலர்ஷிப்ஸில் எண்ட்-டு-எண்ட் இவி சார்ஜிங் உள்கட்டமைப்பை வழங்குவதன் மூலம் இந்த கூட்டாண்மை நாடுகளின் எலக்ட்ரிக் இயக்கத்தை மேம்படுத்தும்.”
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்