- ஹூண்டாயின் முதல் ஹைட்ரஜனில் இயங்கும் காராகும்
- தென் கொரியாவில் தயாரிக்கப்பட்டது
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நெக்ஸோ ஹைட்ரஜன் ஃப்யூல் செல் மாடலை ஹூண்டாய் நிறுவனம் மீண்டும் பாரத் மொபிலிட்டி ஷோ-2024 இல் காட்சிப்படுத்தியது. இது மூன்றாவது முறையாக இந்தியாவில் காட்சிப்படுத்தப்படுகிறது, இதன் உள்கட்டமைப்பு குறைபாடு காரணமாக வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெறவில்லை.
இதன் 95kWh பேட்டரி பேக்கில் இருந்து வரும், நெக்ஸோ ஹைட்ரஜன் சக்தியின் உதவியுடன் மின்சாரத்தை உருவாக்கி எலக்ட்ரிக் மோட்டார் மூலம் 161bhp/395Nm டோர்க்கை உருவாக்குகிறது. இது 0-100 கிமீ வேகத்தை வெறும் 9.2 வினாடிகளில் எட்டிவிடும் மற்றும் மணிக்கு 179 கிமீ வேகத்தில் செல்லும்.
வடிவமைப்பைப் பொறுத்தவரை, ஹூண்டாயின் நெக்ஸோ பெரிய எல்இடி லைட் பார்கள், லோ செட் ஹெட் லேம்ப்களுடன் கூடிய ஃப்ளேர்ட் வீல்கள் மற்றும் உடல் விளிம்புகளை நோக்கி முக்கோண டெயில் லேம்ப்கள் ஆகியவற்றைப் பெறுகிறது. இது 4.67 மீட்டர் நீளம் மற்றும் 2.7 மீட்டர் வீல்பேஸ் கொண்டது.
ஃபுல்லி லோடெட் நெக்ஸோ மாடலில் 360 டிகிரி கேமரா, லெவல்-2 ஏடாஸ், லெதரெட் அப்ஹோல்ஸ்டரி, டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் கனெக்டெட் கார் டெக்னாலஜி ஆகியவை உள்ளன. முன்பே கூறியது போல், இந்த கார் இந்தியாவிற்கு வர வாய்ப்பில்லை, ஆனால் எதிர்காலத்தில் இந்த டெக்னாலஜி வரக்கூடும் என்று ஹூண்டாய் நிறுவனம் தெளிவாக உள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்