- விலை 7.86 லட்சத்தில் தொடங்குகிறது
- இரண்டு புதிய வேரியன்ட்ஸை சேர்த்துள்ளது
ஹூண்டாய் மோட்டார்ஸ் எக்ஸ்டரின் புதிய என்ட்ரி லெவல் S+ ஏஎம்டீ மற்றும் S (O )+ எம்டீ வேரியன்ட்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் அவற்றின் விலை ரூ. 7.86 லட்சம் மற்றும் ரூ. 8.43 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முறையே. இந்த இரண்டு வேரியன்ட்ஸிலும் + என்பது மைக்ரோ-எஸ்யுவிக்கான ஒரு அம்சமாக சன்ரூஃப் சேர்ப்பதாகும், மேலும் அவை ரூ. 28000 (எம்டீ) மற்றும் ரூ. 31000 (ஏஎம்டீ) விலையில் சன்ரூஃப் இல்லாத வேரியன்ட்ஸ்ஸை விடவும் அதிகமாக விற்கப்படும்.
சன்ரூஃப் தவிர, டிஜிட்டல் கிளஸ்டர், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 8.0-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்ஸ், அல் பவர் விண்டோஸ், எல்இடி டிஆர்எல்ஸ், ஃப்ரண்ட் மற்றும் ரியர் ஸ்கிட் பிளேட்ஸ் மற்றும் எஸ்கார்ட் ஃபங்ஷன் கொண்ட ஹெட்லேம்ப்ஸ் ஆகியவை இதன் முக்கிய சிறப்பம்சங்கள் ஆகும்.
ஹூண்டாயின் 1.2-லிட்டர் த்ரீ சிலிண்டர் எம்பீஐ பெட்ரோல் இன்ஜினுடன் எக்ஸ்டர் வழங்கப்படுகிறது, இது 82bhp/113.8Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது மற்றும் ஃபைவ்-ஸ்பீட் எம்டீ அல்லது ஃபைவ்-ஸ்பீட் ஏஎம்டீ உடன் பெறலாம். இந்த இன்ஜின் சிஎன்ஜி வெர்ஷனிலும் பெறலாம், 68bhp/95Nm டோர்க்கை வெளியிடும் மேலும் இது ஃபைவ்-ஸ்பீட் எம்டீ டிரான்ஸ்மிஷனில் மட்டுமே வழங்கப்படுகிறது. டாடா தனது ட்வின் சிலிண்டர் தொழில்நுட்பத்துடன் இருப்பதைப் போன்றே அதன் ஹை-டூயல் சிஎன்ஜி அமைப்புக்கு மாறிய முதல் ஹூண்டாய் கார் எக்ஸ்டர் ஆகும். ஹூண்டாய் தனது சன்ரூஃப் செயல்பாடுகளை கணிசமாக உள்ளூர்மயமாக்கிய முதல் நிறுவனங்களில் ஒன்றாகும், மேலும் அதன் முழு வரம்பிலும் அதை வழங்குவதன் மூலம் பலன்களை அறுவடை செய்து வருகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்