- பிராண்டின் மிகக் குறைந்த விற்பனையான மாடல் இதுவாகும்
- ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் ஃபுல் எலக்ட்ரிக் மாடல்
ஹூண்டாய் இந்தியா தனது அதிகாரப்பூர்வ வெப்சைட்டிலிருந்து ஃபுல்லி எலக்ட்ரிக் கோனா எஸ்யுவியை தூக்கியது, அதன் பிறகு நிறுவனம் இந்த மாடலை இந்தியாவில் முழுமையாக நிறுத்தப் போகிறதா என்று ஊகிக்கப்படுகிறது.
கோனா-எலக்ட்ரிக் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் எலக்ட்ரிக் எஸ்யுவி என்று உங்களுக்குத் தெரிவிக்கிறோம், இதன் கடைசி எக்ஸ்ஷோரூம் விலை ரூ. 23.84 லட்சம் ஆகும். இந்த கார் 2019 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது, அதன் பிறகு இதுவரை இந்த எலக்ட்ரிக் காரில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
கொரிய கார் தயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்ட இந்த கார் விற்பனையின் அடிப்படையில் மிகக் குறைந்த விற்பனையான மாடல்களில் ஒன்றாகும். இது தவிர, வாடிக்கையாளர்களை கவரும் வகையில், இந்த மாடலை வாங்கும் போது, 1.5 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடியும் வழங்கப்பட்டிருந்தது.
ப்ரீமியம் மாடலாக விற்கப்படும் கோனா எலக்ட்ரிக், 39.2kWh பேட்டரி பேக்குடன் கிடைக்கிறது, இது 134bhp பவர் மற்றும் 395Nm டோர்க்கை உருவாக்கும் சிங்கிள் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. டிரைவிங் ரேஞ்சைப் பொறுத்தவரை, இந்த காரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 452 கிமீ தூரம் வரை எளிதாக பயணிக்க முடியும் என்று தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர்.
இருப்பினும், இப்போது இந்த கார் நிறுவனத்தின் வெப்சைட்டிலிருந்து அகற்றப்பட்ட பிறகு, நாட்டில் அதன் விற்பனையும் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் இந்த நாட்களில் ஆட்டோமேக்கர் க்ரெட்டாவின் எலக்ட்ரிக் வெர்ஷனில் வேலை செய்கிறார். க்ரெட்டா எலக்ட்ரிக் உற்பத்தி இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது சில மாதங்களில் லான்ச் செய்யப்படலாம்.
விலையைப் பற்றி பேசுகையில், க்ரெட்டா இவி ஐசிஇ வெர்ஷனை விட விலை அதிகமாக இருக்கும். கோனா எலக்ட்ரிக் காரின் விலை சுமார் ரூ. 25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் க்ரெட்டா இவி’யும் இதே விலை ரேஞ்சில் இருக்கலாம். க்ரெட்டா தனது பெயரைத் தக்க வைத்துக் கொள்ளும் அதே வேளையில், இங்கு அதாவது இவியிலும் விற்பனையில் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று நம்புகிறோம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்