- ஐயோனிக் 5 என்’னின் டெஸ்டிங் தொடங்கியது
- குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடில் அறிமுகம் ஆகும்
புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 என் எப்போது அறிமுகமாகும்?
ஹூண்டாய் ஐயோனிக் 5 எனின் டெஸ்டிங் தொடங்கியுள்ளது, இது ஜூலை 13 அன்று குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும். இது பிராண்டின் முதல் பர்ஃபார்மன்ஸ் சார்ந்த ஆல்-எலக்ட்ரிக் வாகனமாக இருக்கும், இது ஸ்டாண்டர்ட் ஐயோனிக் 5 உடன் ஒப்பிடும்போது பல புதிய புதுப்பிப்புகளை பெறும். இந்த சோதனை ஜெர்மனியில் உள்ள நுர்பர்கிரிங் சர்க்யூட்டில் நடக்குகிறது என்பதை உங்களுக்கு தெரிவிக்கிறோம்.
ஹூண்டாய் ஐயோனிக் 5 என் ஹார்டுவேர் அப்டேட்ஸ்
புதிய ஐயோனிக் 5 என் ஆனது எலக்ட்ரிஃபைட்- க்ளோபல் மாடுலர் ப்ளாட்ஃபார்ம் அடிப்படையாகக் கொண்டது, இது ஏற்கனவே 10,000 கி.மீ ரேஸ் ட்ராக்கில் சோதிக்கப்பட்டது மற்றும் அதன் உலகளாவிய அறிமுகத்திற்கு முன்னதாக மேலும் 10,000 கி.மீ வரை டெஸ்டிங் செய்யபடும். ஹூண்டாய் கூற்றுப்படி, இவிஸை குளிர்ச்சியாக வைத்திருப்பது ஐசிஇ’ஐ விட பெரிய சவாலாகும், எனவே இதில் கூலிங்க்கு ஹீட் மேனேஜ்மென்ட்டை சேர்க்கப்படுகிறது.
இதில் என் பேட்டரி மற்றும் என் ரேஸின் ஹீட் மேனேஜ்மென்ட் சொல்யூஷனும் இதில் இருக்கும். என் பேட்டரியில் டிராக் மற்றும் ட்ராக் என இரண்டு மோட்ஸ் மற்றும் என் ரேஸில் ஸ்பிரிண்ட் மற்றும் எண்டுரன்ஸ் என இரண்டு மோட்ஸை கொண்டிருக்கும்.
நியூ ஐயோனிக் 5 என் ஃபீச்சர்ஸ்
இது லைட்வெயிட் பொருட்களால் செய்யப்பட்ட பெரிய 400 மி.மீ டிஸ்க் ப்ரேக்ஸ், கூலிங் ஃபங்ஷன்ஸும் வழங்கப்படும். இது தவிர, இது பிராண்டின் என் ஆக்டிவ் சவுண்டைப் பெறும், இதில் இக்னிஷன், எவல்யூஷன் மற்றும் சூப்பர்சோனிக் ஆகிய மூன்று வெவ்வேறு சவுண்ட் தீம்ஸில் 10-ஸ்பீக்கர் அமைப்பைக் கொண்டிருக்கும்.
இந்த தீம்ஸ் ஐசிஇ என் கார்ஸின் 2.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும், அதே நேரத்தில் இந்த எலக்ட்ரிக் சவுண்ட் என் 2025 விஷன் கிரண் டூரிஸ்மோ கான்செப்ட் மற்றும் RN22e மற்றும் ஃபைட்டர் ஜெட் சவுண்டால் இன்னைகப்படும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்