- ரெகுலர் i20 மற்றும் N லைனின் இரண்டு வெர்ஷன்கள் கிடைக்கிறது
- தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்ஸில் விலை அதிகரிப்பு பொருந்தும்
ஹூண்டாய் தனது அனைத்து மாடல்களின் விலையையும் ஜனவரி 2024 முதல் உயர்த்தியுள்ளது. எல்லா பிராண்டுகளைப் போலவே கார் தயாரிப்பாளரும் கடந்த மாதம் உயர்வை அறிவித்தார். இக்கட்டுரையில் i20 வேரியன்ட்ஸின் புதிய விலைகள் பற்றிய தகவல்களை வழங்கியுள்ளோம்.
ஹூண்டாய் i20 அஸ்டா (O) எம்டீ வேரியன்ட்டின் விலை ரூ. 1,900 அதிகரித்துள்ளது. ஸ்போர்ட்ஸ் ஐவிடீ, அஸ்டா எம்டீ டூயல்-டோன் மற்றும் ஸ்போர்ட்ஸ் எம்டீ டூயல்-டோன் ஆகியவற்றின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. மற்ற எல்லா வேரியன்ட்ஸின் விலையும் ரூ. 4,900 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் i20 இன் விலை தற்போது ரூ. 7.04 லட்சம் முதல் ரூ. 11.21 லட்சம் வரை உள்ளது.
i20 N லைன் ப்ரீமியம் ஹேட்ச்பேக்கின் என்ட்ரி லெவல் N6 மேனுவல் வேரியன்ட்டின் விலை 10 ரூபாய் அதிகரித்துள்ளது. அதேசமயம் மற்ற அனைத்து வேரியன்ட்ஸின் விலையும் ரூ. 4,900 வரை உயர்த்தப்பட்டுள்ளது. i20 N லைன் இப்போது ரூ. 9.99 லட்சம் முதல் ரூ. 12.52 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்கப்படுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்