- ஹூண்டாய் சமீபத்தில் i20 N லைன் ஃபேஸ்லிஃப்ட்டை அறிமுகப்படுத்தியது
- ஐஎம்டீ யூனிட் வழக்கமான சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனால் மாற்றப்பட்டது
இந்த மாத தொடக்கத்தில், ஹூண்டாய் நாட்டில் i20 மற்றும் i20 N லைனின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்ஸை அறிமுகப்படுத்தியது. இந்த வெளியீடுகள் திருத்தப்பட்ட வடிவமைப்பு மற்றும் புதிய அம்சங்களைக் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல் தொழில்நுட்பத் துறையில் மாற்றத்தையும் கண்டன.
2023 i20 N லைன் அறிமுகத்துடன், ஹூண்டாய் ஐஎம்டீ டிரான்ஸ்மிஷனை நிறுத்திவிட்டது. இந்த யூனிட் இப்போது வழக்கமான சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனால் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாடல் 1.0-லிட்டர், த்ரீ-சிலிண்டர், டர்போ-பெட்ரோல் இன்ஜினிலிருந்து 118bhp மற்றும் 172Nm டோர்க்கை வெளியீட்டை உருவாக்குகிறது.
புதிய ஹூண்டாய் i20 N லைன் ஃபேஸ்லிஃப்ட்டின் சில சிறப்பம்சங்கள், புதிய அலோய் வீல்ஸ், ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப்ஸ், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ரியர் பம்பர், சென்டர் கன்சோலில் உள்ள டைப்-சியுஎஸ்பி போர்ட், ப்ளூலிங்க் இணைக்கப்பட்ட கார் டெக்னாலஜி மற்றும் போஸ்-ஆதார ஏழு- ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்