- இந்தியாவில் 2023 i20 N லைனின் ஆரம்ப விலை ரூ. 9.99 லட்சம்
- தற்போது இதை சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வும் வழங்கப்படும்
கடந்த வாரம் ஹூண்டாய் இந்தியா ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட i20 N லைன்’ஐ ரூ. 9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் நாட்டில் லான்ச் செய்துள்ளது. இரண்டு வேரியண்ட்ஸ் மற்றும் ஏழு வண்ண விருப்பங்களில் கிடைக்கும் இந்த மாடலை பற்றி மேலும் பார்ப்போம்.
2023 ஹூண்டாய் i20 Nலைன் ஆனது, மோனோ-டோனில் அபிஸ் பிளாக், அட்லஸ் ஒயிட், டைட்டன் க்ரே, தண்டர் ப்ளூ மற்றும் ஸ்டார்ரி நைட் நிறத்தில் பெறலாம். மறுபுறம், டூயல்-டோனில் தண்டர் ப்ளூ மற்றும் அட்லஸ் ஒயிட் ஆகியவற்றை அபிஸ் பிளாக் ரூஃப் உடன் வழங்கப்படுகிறது. இதை N6 மற்றும் N8 வேரியண்ட்ஸில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம்.
அப்டேடட் i20 Nலைன் ஆனது, 1.0 லிட்டர், த்ரீ-சிலிண்டர், டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் 118bhpமற்றும் 172Nmடோர்க்கை உருவாக்குகிறது, மேலும் செவன்-ஸ்பீட் டிசிடீ யூனிட்டுடன் ஃப்ரண்ட் வீல்ஸ்க்கு பவரை அனுப்புகிறது. தற்போது இருக்கும் வெர்ஷனில் இருந்து ஐஎம்டீ யூனிட்டை நிறுத்தப்பட்டு, அதற்கு மாறாக சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மூலம் இயக்கப்படும்.
முந்தைய வெர்ஷனை விட புதிய i20 N லைன் ஃபேஸ்லிஃப்ட்டில் ஃபுல்-எல்இடி ஹெட்லேம்ப்ஸ், திருத்தப்பட்ட ரியர் பம்பர், புதிய அலோய் வீல் டிசைன், போஸ்-ஆதார ஏழு ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம், ஓடீஏ அப்டேட்ஸ், டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் ப்ளூலிங்க் இணைக்கப்பட்ட கார் டெக்னாலஜி ஆகியவை அடங்கும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்