- இந்தியாவில் வரும் மாதங்களில் லான்ச் செய்யப்படும்
- தற்போதுள்ள 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் கிடைக்கும்
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஃபேஸ்லிஃப்ட் i20 மாடலை லான்ச் செய்தது. இப்போது ஆட்டோமேக்கர் இந்த ஹேட்ச்பேக்கின் அப்டேட்ட N லைன் வெர்ஷன்னை சர்வதேச சந்தையில் வெளியிட்டுள்ளது, இது விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய i20 N லைன் எக்ஸ்டீரியரில் 'N' பேட்ஜிங்குடன் கூடிய புதிய ரேடியேட்டர் கிரில், N லைன் ஸ்போர்ட்டி பம்ப்பர்கள், ஃப்ரண்ட் பம்பர் மற்றும் சைடில் ரெட் இன்சர்ட்ஸ், புதிதாக வடிவமைக்கப்பட்ட 17-இன்ச் டைமண்ட்-கட் அலோய் வீல்ஸ் மற்றும் குரோம் ட்வின் எக்ஸாஸ்ட் ஆகியவை இதில் உள்ளன. இது தவிர, கார் உற்பத்தியாளர் நான்கு புதிய வண்ண விருப்பங்களை இதில் வழங்கியுள்ளார். லுமென் கிரே பேர்ல், மெட்டா ப்ளூ பேர்ல், வைப்ரன்ட் ப்ளூ பேர்ல் மற்றும் லூசிட் லைம் மெட்டாலிக் ஆகியவை இதில் அடங்கும்.
இதன் இன்டீரியர் ஃபுல்லி பிளாக் தீமில் டாஷ்போர்டு மற்றும் கன்ட்ரோல்ஸில் ரெட் அக்ஸ்ன்ட்ஸ்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இது லேதர் மற்றும் ரெட் தையல் கொண்ட பிரத்யேக N லைன் ஸ்டீயரிங் வீல், ஸ்போர்ட்டி கியர்பாக்ஸ் லெவர், அலுமினிய தோற்றத்துடன் கூடிய ஸ்போர்ட்ஸ் பெடல்கள் மற்றும் N லைன் சார்ந்த ஸ்போர்ட்ஸ் சீட்ஸ் ஆகியவற்றைப் பெறுகிறது. மொபைல் கனெக்டிவிட்டி உடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் சார்ஜர், சிங்கிள்-பேன் சன்ரூஃப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் போஸ் சவுண்ட் சிஸ்டமும் இதில் அடங்கும்.
ஃபேஸ்லிஃப்ட் i20 N லைன் தற்போதுள்ள மாடலில் உள்ள அதே இன்ஜின் விருப்பங்களைப் பெற வாய்ப்புள்ளது. இது 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினைப் பெறும், இது 118bhp மற்றும் 172Nm டோர்க்கை உருவாக்குகிறது மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது செவன்-ஸ்பீட் டூயல்-கிளட்ச் டிரான்ஸ்மிஷன் யூனிட்டுடன் இணைக்கப்படலாம்.