- i20 ஃபேஸ்லிஃப்ட் 2023-இறுதியில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
- உள்ளே மற்றும் வெளியே காஸ்மெட்டிக் மாற்றங்கள் கிடைக்கும்
ஹூண்டாய் i20 இந்தியாவில் மீண்டும் டெஸ்டிங் செய்யப்பட்டது. இந்த முறை, ஹேட்ச்பேக் புதிய அலோய் வீல்ஸுடன் காணப்பட்டது.
ஹூண்டாய் i20 ஃபேஸ்லிஃப்ட் எக்ஸ்டீரியர் அப்டேட்ஸ்
ஹூண்டாய் i20 ஃபேஸ்லிஃப்ட் இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இதில் ட்வீக் செய்யப்பட்ட ஃப்ரண்ட் மற்றும் ரியர் ப்ரோஃபைல்ஸை கொண்டிருக்கும். இன்டர்நேஷனல்-ஸ்பெக் மாடலுடன் பார்க்கையில், i20 ஆனது மாற்றியமைக்கப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப்ஸுடன் மறுவடிவமைக்கப்பட்ட ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்பர்ஸைப் பெறும்.
புதிய அலோய் வீல்ஸுடன் கூடுதலாக, புதிய i20 டெயில் லேம்ப்ஸ்க்கான புதிய வடிவமைப்பையும் மற்றும் டெயில்கேட் முழுவதும் இணைக்கும் ஸ்ட்ரிபையும் பயனடையலாம்.
ஹூண்டாய் i20 வெயிட்டிங் பீரியட்
இந்த i20 வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் தற்போது தங்கள் காரை முன்பதிவு செய்த பிறகு ஆறு வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும். இது ஹேட்ச்பேக்கின் ஸ்போர்ட்டியர் வெர்ஷனான i20 என் லைனுக்கும் பொருந்தும்.
ஹூண்டாய் i20 ஃபேஸ்லிஃப்ட் இன்ஜின் விருப்பங்கள்
டீசல் இன்ஜின் நிறுத்தப்பட்டவுடன், i20 ஃபேஸ்லிஃப்ட் தற்போதைய ஜெனரேஷன்இன்ஜினுடன் வழங்கப்படும். இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்