சமீபத்தில், ஹூண்டாய் மோட்டார்ஸ் சர்வதேச அளவில் 100 மில்லியன் கார்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது. தென் கொரிய கார் தயாரிப்பு நிறுவனம் அளித்த தகவலின்படி, 57 ஆண்டுகளில் 100 மில்லியனுக்கும் அதிகமான கார்களை தயாரித்து பிராண்ட் சாதனை படைத்துள்ளது. இது நிறுவப்பட்ட ஆண்டு முதல் வாகனத் துறையில் எந்த நிறுவனமும் இல்லாத வேகமான சாதனையாக உள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில், நிறுவனம் 100 மில்லியனுக்குப் பிறகு தயாரிக்கப்படும் முதல் காரின் படத்தைப் பகிர்ந்துள்ளது, இது ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடலாகும்.
இது தவிர, சமீபத்திய செய்திகளில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா அதன் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றான க்ரெட்டாவின் எலக்ட்ரிக் வெர்ஷன்னை விரைவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ஜனவரி 2025 இல் நடைபெறும் இந்தியா மொபிலிட்டி எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படும் புதிய ஆண்டின் தொடக்கத்தில் இது அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் சில மாதங்களுக்குப் பிறகு இது அறிமுகப்படுத்தப்படலாம்.
இந்த கார் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு சோதனையின் போது தென்ப்பட்டது, இதன் காரணமாக கார் தொடர்பான தகவல்களும் வெளி வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 360 டிகிரி சரவுண்ட் கேமரா, லெவல் 2 ஏடாஸ், பனோரமிக் சன்ரூஃப், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், பவர்ட் டிரைவர் சீட், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோ-டிம்மிங்க் ஐஆர்விஎம் போன்ற மேம்பட்ட அம்சங்களுடன் க்ரெட்டா இவி பொருத்தப்பட உள்ளதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்