- இதன் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்க்கு மிக நீண்ட வெயிட்டிங் பீரியட்டை கொண்டுள்ளன.
- கிராண்ட் i10 நியோஸ் இரண்டு இன்ஜின் விருப்பங்களுடன் நான்கு வேரியண்ட்ஸில் கிடைக்கிறது
ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் தற்போது விற்பனையில் உள்ள பிராண்டின் மிகவும் குறைந்த விலை மாடலாகும். இந்த ஹேட்ச்பேக் நான்கு வேரியண்ட்ஸ் மற்றும் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்ஸில் கிடைக்கிறது. கிராண்ட் i10 நியோஸ் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் டெலிவரிக்கு 14 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும்.
கிராண்ட் i10 நியோஸ் ஆனது எரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் அஸ்டா வேரியண்ட்ஸில் கிடைக்கிறது. இதன் மேனுவல் வேரியண்ட்க்கு இரண்டு முதல் எட்டு வாரங்கள் வரை வெயிட்டிங் பீரியட்டில் கிடைக்கின்றன. மறுபுறம், ஆட்டோமேட்டிக் வேரியண்ட்க்கு, 14 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். மேலும், சிஎன்ஜி வேரியண்ட்க்கு நான்கு முதல் பத்து வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும்.
ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸின் வேரியண்ட் வாரியான காத்திருப்பு காலம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
வேரியண்ட்ஸ் | வெயிட்டிங் பீரியட் |
எரா | 4-6 வாரங்கள் |
மேக்னா | 2 வாரங்கள் |
ஸ்போர்ட்ஸ் | 2-4 வாரங்கள் |
அஸ்டா | 6-8 வாரங்கள் |
மேக்னா ஏஎம்டீ | 12-14 வாரங்கள் |
ஸ்போர்ட்ஸ் ஏஎம்டீ | 2-4 வாரங்கள் |
அஸ்டா ஏஎம்டீ | 8-10 வாரங்கள் |
மேக்னா சிஎன்ஜி | 8-10 வாரங்கள் |
ஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி | 4-6 வாரங்கள் |
கிராண்ட் i10 நியோஸ் ஆனது 1.2-லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் இன்ஜின் 82bhp மற்றும் 114Nm டோர்க் திறனை உருவாக்குகிறது. சிஎன்ஜி இன்ஜின் 68bhp மற்றும் 95Nm டோர்க்கை உற்பத்தி செய்யும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்