- மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் வரியண்ட்ஸில் மட்டுமே கிடைக்கும்
- இந்த காரின் விலை 7.75 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்
ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஹை-சிஎன்ஜி டூயல் ஐ இந்தியாவில் ரூ. 7.75 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகமானது. இது மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய இரண்டு வேரியன்ட்ஸில் மற்றும் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே வழங்கப்படுகிறது.
ஹை-டூயல் சிஎன்ஜி ஏற்கனவே எக்ஸ்டர் காம்பேக்ட் எஸ்யுவியில் கிடைக்கிறது மற்றும் தென் கொரியா வாகன உற்பத்தியாளரின் சிஎன்ஜி டேங்க்ஸின் திருத்தப்பட்ட வடிவமைப்பாகும். இது பெரிய டேங்க்கை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, அதை துவக்கத்தில் கீழே வைத்தது, இதன் மூலம் நிறைய இடத்தை விடுவிக்கிறது. கிராண்ட் i10 நியோஸ் போன்ற காருக்கு இது மிகவும் முக்கியமானது, அங்கு பூட் ஸ்பேஸ் ஏற்கனவே மிகவும் இறுக்கமாக உள்ளது. இருப்பினும், டாடாவின் சிங்கிள் சிலிண்டர் விருப்பத்தை நீக்கியதைப் போலல்லாமல், நீங்கள் இன்னும் ஒரு சிஎன்ஜி டேங்குடன் நியோஸைப் பெறலாம்.
ஹூண்டாயின் 1.2-லிட்டர் த்ரீ-பாட் 68bhp மற்றும் 95.2Nm உற்பத்தி செய்யும் இன்ஜின் பொருதப்ப்ட்டுள்ளது. டிரான்ஸ்மிஷனில் இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் சிஎன்ஜி-பெட்ரோல் பயன்முறையானது போகும்போதே மாறக்கூடியது. ஸ்டாண்டர்ட் மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் வேரியன்ட்ஸின் அதே அம்சங்களைப் பெறுவீர்கள். கூடுதலாக, அனைத்து வெர்ஷனிலும் 6 ஏர்பேக்குகள், டிபிஎம்எஸ் ஹைலைன், ரியர் பார்க்கிங் கேமரா, டே அண்ட் நைட் ஐஆர்விஎம் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) ஆகியவற்றை பெறுகின்றன.
மாருதி, டாடா மற்றும் இப்போது ஹூண்டாய் இடையே ஒரு புதிய சிஎன்ஜி பந்தயத்தின் நடுவில் நியோஸ் அமர்ந்திருக்கிறது. மாருதி சிங்கிள் சிலிண்டர் சிஎன்ஜியை மட்டுமே வழங்குகிறது. அதுவே டாடா டூயல் சிஎன்ஜி சிலிண்டர் டெக்னாலஜியை அறிமுகம் செய்து முதல் இடத்தை பிடிதுள்ளது. இது டியாகோ சிஎன்ஜி எம்டீ/ஏஎம்டீ, டிகோர் சிஎன்ஜி மற்றும் வரவிருக்கும் மாதங்களில், ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் சிஎன்ஜி ஆகியவற்றுடன் போட்டியிடும்
ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஹை-சிஎன்ஜி டூயல் விலை
ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஹை-சிஎன்ஜி டூயல் மேக்னா- ரூ 7.75 லட்சம்
ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஹை-சிஎன்ஜி டூயல் ஸ்போர்ட்ஸ்- ரூ 8.30 லட்சம்
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்