- எக்ஸ்டர் இந்தியாவில் ஜூலை 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது
- டாடா பஞ்ச் மற்றும் சிட்ரோன் C3’க்கு எதிராக போட்டியிடும்
எக்ஸ்டரின் வெளியீடு ஜூலை 10 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, ஹூண்டாய் இந்தியா முன்பதிவுகளைத் தொடங்கி உள்ளது, இந்த மைக்ரோ எஸ்யுவி பற்றிய பல விவரங்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இந்த பகுதியில், எக்ஸ்டரில் அறிமுகமாகும் இரண்டு தனித்துவமான அம்சங்களைப் பற்றி நாங்கள் இதில் தெரிவிக்கிறோம்.
எக்ஸ்டரின் யூனிக் ஃபீச்சர்ஸ்
ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் எக்ஸ்டரில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரின் சிறப்பு என்னவென்றால், ஆங்கிலம் தவிர மற்ற மொழியிலும் இதைப் பயன்படுத்தலாம். இந்த இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரில் 10 பிராந்திய மொழிகள் மற்றும் இரண்டு சர்வதேச மொழிகளிலும் பயன்படுத்தலாம்.
ஹூண்டாய் 'சவுண்ட்ஸ் ஆஃப் நேச்சர்' என்று அழைக்கும் அம்சத்துடன் எக்ஸ்ரில் பொருத்தப்பட்டிருக்கும். இந்த ஏழு ஆம்பியண்ட் சவுண்ட்ஸ் 8-இன்ச் டச்ஸ்கிரீன் உடன் பொருதப்பட்டுள்ளது, இது வாய்ஸ் கமாண்ட்ஸையும் ஆதரிக்கிறது. இது தவிர, எக்ஸ்டரில் எலக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட்ஸ் ஆகியவையும் இதில் அடங்கும்.
எக்ஸ்டரின் இன்ஜின் விவரங்கள்
ஹூண்டாய் எக்ஸ்டர் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும், இது 82bhp மற்றும் 114Nm டோர்க்கை உருவாக்கும். இதன் சிஎன்ஜி வேரியண்ட் 68bhp மற்றும் 95Nm டோர்க்கையும் வழங்கும். இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ யூனிட் உடன் இணைக்கப்படும்.
எக்ஸ்டரின் விலை மற்றும் போட்டியாளர்கள்
ஹூண்டாய் எக்ஸ்டர் விலை ரூ.6 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கலாம். வெளியீட்டிற்குப் பிறகு, இது டாடா பஞ்ச், சிட்ரோன் C3 மற்றும் மாருதி சுஸுகி இக்னிஸ் ஆகியவற்றுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்