இந்தியன் கார் ஆஃப் தி இயர் 2024 (ஐகுட்டி 2024) விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, இதில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் எக்ஸ்டர் ஆண்டின் சிறந்த கார் பட்டத்தைப் பெற்றது. ஆல்-எலக்ட்ரிக் ஹூண்டாய் ஐயோனிக்5 ஆண்டின் க்ரீன் கார் ஆஃப் தி இயர் மற்றும் பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் 2024 ஆண்டின் பிரீமியம் கார் ஆஃப் தி இயர் விருதைப் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி ஜேகே டயர்ஸ் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்கிறோம்.
இந்த நிகழ்வில், ஹோண்டா எலிவேட், டொயோட்டா இனோவா ஹைகிராஸ், மாருதி சுஸுகி ஜிம்னி, ஹூண்டாய் எக்ஸ்டர், ஹூண்டாய் வெர்னா, சிட்ரோன் C3 ஏர்கிராஸ், மஹிந்திரா XUV400 மற்றும் எம்ஜி காமெட் இவி போன்ற வாகனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில், ஹூண்டாய் எக்ஸ்டர் 2024 ஆம் ஆண்டின் இந்திய கார் ஆஃப் தி இயர் பட்டத்தை வென்றது, மாருதி சுஸுகி ஜிம்னி முதல் ரன்னர்-அப் மற்றும் ஹோண்டா எலிவேட்/டொயோட்டா இனோவா ஹைகிராஸ் இரண்டாவது ரன்னர்-அப் என அறிவிக்கப்பட்டது.
எக்ஸ்டர் எஸ்யுவி ஆனது 1.2-லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. எக்ஸ்டர் ஆனது சிஎன்ஜி வேரியன்ட்டிலும் கிடைக்கிறது, இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது EX, EX (O), S, S (O), SX, SX (O) மற்றும் SX (O) கனெக்ட் ஆகிய ஏழு வேரியன்ட்ஸில் கிடைக்கிறது. தற்போது இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 6 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
ஐகுட்டி 2024 ஜூரி உறுப்பினர்களில் கார்வாலேச் சேர்ந்த விக்ராந்த் சிங், ஆட்டோஎக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த துருவ் பஹால் மற்றும் இஷான் ராகவ், ஆட்டோ டுடேயைச் சேர்ந்த யோகேந்திர பிரதாப் மற்றும் ராகுல் கோஷ், கார் இந்தியாவைச் சேர்ந்த எஸ்பி பத்தேனா மற்றும் ஜோஷ்வா வர்கீஸ், ஈவோ இந்தியாவைச் சேர்ந்த சிரிஷ் சந்திரன் மற்றும் அதிஷ் மிஸ்ரா, மோட்டாரிங் வேர்ல்ட் சாட்டர்ஜியிலிருந்து பாப்லோ மற்றும் கார்த்திக் வேர், ஓவர் டிரைவிலிருந்து ரோஹித் பரத்கர் மற்றும் பாப் ரூபானி, டைம்ஸ் ஆட்டோவில் இருந்து அர்பித் மகேந்திரா, கார்தேகோ/ஜிக்வீல்ஸில் இருந்து அமெய் தண்டேகர், டர்போசார்ஜ்டில் இருந்து அபய் வர்மா, பவர்டிரிஃப்டில் இருந்து சைரஸ் தாபர் மற்றும் தி பிரிண்டிலிருந்து குஷன் மித்ரா ஆகியோர் பங்குபெற்றனர்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்