- எக்ஸ்டர் 40+ அட்வான்ஸ்டு சேஃப்டி ஃபீச்சர்ஸை பெறுகிறது
- டூயல் கேமரா மற்றும் பர்க்லர் அலாரம் கொண்ட ஃபர்ஸ்ட்-செக்மெண்ட் டேஷ்கேமைப் பெறுகிறது
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் அதன் வரவிருக்கும் எக்ஸ்டர் எஸ்யுவியின் சேஃப்டி ஃபீச்சர்ஸை இன்று வெளியிட்டது. டாடா பஞ்ச்க்கு போட்டியாக இந்த சப்-4 மீட்டர் எஸ்யூவியின் எல்லா வேறியண்ட்ஸிலும் ஆறு ஏர்பேக்ஸைப் பெறும்.
பாதுகாப்பிற்காக இந்த எஸ்யுவியில் எலக்ட்ரோனிக்ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், வெஹிக்கல்ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட், ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல் மற்றும் ஏபிஎஸ் உடன் ஈபிடி போன்ற அம்சங்களைப் பெறுகிறது. மேலும், இது பர்க்லர் அலாரம், த்ரீ பாயிண்ட் சீட் பெல்ட், சீட் பெல்ட் ரிமைன்டர், கீலெஸ் என்ட்ரி மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார் போன்ற பாதுகாப்பு அம்சங்களை வழங்கும்.
இது தவிர, எக்ஸ்டர் ஆனது எஸ்கார்ட் ஃபங்ஷனுடன், ஆட்டோ ஹெட்லேம்ப்ஸ், ரியர் டிஃபாக்கர், ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் ஐஸோஃபிக்ஸ் உடன் பெறுகிறது, இது டாப் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். நிறுவனம் டூயல் கேமராஸ் மற்றும் டீபிஎம்எஸ் உடன் இந்த செக்மெண்டில்-முதல் டாஷ்கேமையும் வழங்குகிறது என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம்.
EX, EX(O), S, S(O), SX, SX(O) மற்றும் SX(O) கனெக்ட் ஆகிய ஏழு வேரியண்ட்ஸில் இந்த எஸ்யுவி வழங்கப்படும். இதன் முன்பதிவாக ரூ.11,000 இல் தொடங்கியுள்ளது. லாஞ்ச்க்கு பிறகு, எக்ஸ்டர் டாடா பஞ்ச், மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ், நிசான் மேக்னைட் மற்றும் ரெனோ கைகர் போன்றவற்றுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்