- இந்தியாவில் எக்ஸ்டரின் விலை ஜூலை மாதம் வெளியிடப்படும்
- எக்ஸ்டர் இந்த செக்மென்ட்டில் முதல் எலக்ட்ரிக் சன்ரூஃப்யை பெறும்
ஹூண்டாய் மோட்டார் இந்தியா (எச்ஐஎம்எல்) நிறுவனம் எக்ஸ்டர் பி-எஸ்யுவியை ஜூலை 10 ஆம் தேதி நாட்டில் அறிமுகப்படுத்துவதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மாடலில் எலக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் டூயல் கேமராஸ் கொண்ட டேஷ்கேம் இடம்பெறும் என்று கார் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய எக்ஸ்டரில், வாய்ஸ் கமாண்ட் உடன் வரும் முதல் எலக்ட்ரிக் சன்ரூஃப் பெறும். மேலும், இது 2.31-இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, ஸ்மார்ட்போன் ஆப் கனெக்டிவிட்டி மற்றும் டிரைவிங் (நார்மல்), இவெண்ட் (சேஃப்டி) மற்றும் வெக்கேஷன் (டைம்-லேப்ஸ்) ஆகிய மூன்று ரெகார்டிங் மோட்ஸைப் பெறும். இது தவிர, ஆறு ஏர்பேக்ஸ், H-வடிவ எல்இடி டிஆர்எல், டூயல்டோன், ரூஃப் ரெயில்ஸ், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், எல்இடி டெயில் லைட்ஸ், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்ஸ் மற்றும் டைமண்ட் -கட் அலோய் வீல்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
2023 ஹூண்டாய் எக்ஸ்டர், மேனுவல் மற்றும் ஏஎம்டீ யூனிட்ஸுடன் கூடிய 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரெடெட் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும். மைக்ரோ-எஸ்யுவி ஏழு வேரியண்ட்ஸிலும், ஒன்பது வண்ண விருப்பங்களிலும் கிடைக்கும்.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் சிஓஓ தருண் கார்க் கூறுகையில், “ஹூண்டாய் எக்ஸ்டரில் பல சிறந்த அம்சங்களை நாங்கள் வழங்கியுள்ளோம். இதுவரை வெளியிடப்பட்ட இமேஜஸ் வாடிக்கையாளர்களின் அற்புதமான பதிலைப் பெற்ற பிறகு, இந்த ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி இந்தியாவில் ஹூண்டாய் எக்ஸ்டர் அறிமுகப்படுத்தப்படும் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.”
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்