-இதில் ஏழு டிரிம்ஸ் பெறலாம்
- மேலும் ஒரு சிஎன்ஜி வேரியண்ட்டும் உள்ளது
ஹூண்டாய் தனது என்ட்ரி-லெவல் எஸ்யுவியான எக்ஸ்டரை ரூ.6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. எஸ்யுவிக்கான முன்பதிவுகள் 8 மே, 2023 அன்று தொடங்கியது, இப்போது உற்பத்தியாளர் அறிவித்தது, எக்ஸ்டர் ஏற்கனவே இரண்டு மாதங்களில் பத்தாயிரம்யூனிட் புக்கிங்ஸை கடந்துவிட்டது.
ஹூண்டாய் எக்ஸ்டர் வேரியண்ட்ஸ்மற்றும் வண்ணங்கள்
இந்த எக்ஸ்டரை EX, EX(O), S, S(O), SX, SX(O) மற்றும் SX(O) கனெக்ட் உள்ளிட்ட ஏழு வேரியண்ட்ஸில் பெறலாம். காஸ்மிக் ப்ளூ மற்றும் ரேஞ்சர் காக்கி ஆகிய இரண்டு புதிய பிரத்யேக ஷேட்ஸ் உடன் ஆறு மோனோடோன் மற்றும் மூன்று டூயல்-டோன் எக்ஸ்டீரியர் வண்ண விருப்பங்களிலிருந்து ஃபைவ்-சீட்டர் எஸ்யுவியை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். மோனோடோன் விருப்பங்களில் அட்லஸ் ஒயிட், காஸ்மிக் ப்ளூ, ஃபையரி ரெட், ரேஞ்சர் காக்கி, ஸ்டார்ரி நைட் மற்றும் டைட்டன் க்ரே ஆகியவை அடங்கும். மறுபுறம், டூயல்-டோனில் அபிஸ் பிளாக் உடன் அட்லஸ் ஒயிட், அபிஸ் பிளாக் உடன் காஸ்மிக் ப்ளூ மற்றும் அபிஸ் பிளாக் உடன் ரேஞ்சர் காக்கி ஆகியவை அடங்கும்.
ஹூண்டாய் எக்ஸ்டர் இன்ஜின் மற்றும் பவர்ட்ரெயின்
டாடா பஞ்ச் போட்டியாளருக்கு 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல் 82bhp மற்றும் 114Nm டோர்க்கை வழங்குகிறது. இந்த மோட்டார் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் அல்லது ஏஎம்டீ யூனிட்டுடன் இணைக்கப்படலாம். மேலும் இதில் சிஎன்ஜி வேரியண்ட் உள்ளது, இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவலுடன் மட்டுமே இணைக்கப்பட்டு 68bhp மற்றும் 95Nm டோர்க்கை வெளிப்படுத்தும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்
ஹூண்டாய் எக்ஸ்டர் வீடியோ
மேலும் இது போன்ற வீடியோஸைப் பார்க்க கார்வாலே யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும்