- எக்ஸ்டர் மாடல் ஜூலை 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்டது
- தனது முதல் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் புதிய நைட் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டது
ஹூண்டாய் இந்தியா அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து 93,000க்கும் அதிகமான எக்ஸ்டர் விற்பனை செய்துள்ளது. மைக்ரோ-எஸ்யுவி ஜூலை-2023 இல் வெளியிடப்படும் மற்றும் அதன் பின்னர் விற்பனையில் வெற்றிகரமான எழுச்சியுடன் இந்திய சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும். மேலும், எக்ஸ்டரின் முதல் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சமீபத்திய ஹூண்டாய் எக்ஸ்டரின் ஸ்பெஷல் நைட் எடிஷன்னை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹூண்டாய் எக்ஸ்டர் ஆனது கிராண்ட் i10 நியோஸ் பிளாட்ஃபார்ம் அடிப்படையாகக் கொண்டது. எக்ஸ்டர் கார் சந்தையில் தொடர்ந்து வெற்றிபெற 'பணத்திற்கான மதிப்பு' என்ற விதி என்று சொல்லலாம். மேலும், கிராண்ட் i10 நியோஸைப் போலவே, இந்த காரில் அதிக இடம், அம்சங்கள் மற்றும் எஸ்யுவி பாடி-ஸ்டைல் ஆகியவை இந்திய வாடிக்கையாளர்களைக் கவர்ந்தது.
அம்சங்களைப் பொறுத்தவரை, எக்ஸ்டர் ஆனது கிராண்ட் i10 நியோஸ் ஐ விட அதிகமான அம்சங்களுடன் வருகிறது, இதில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், வாய்ஸ்-அசிஸ்டட் எலக்ட்ரிக் சன்ரூஃப், டூயல் டேஷ் கேமரா, ஆன்-போர்டு நேவிகேஷன் சிஸ்டம், நேச்சர் அம்பியன்ட் சவுண்ட் மற்றும் பேடில் ஷிஃப்டர்ஸ் ஆகியவை அடங்கும்.
இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட 1.2-லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வரியண்ட்ஸில் நிறுவனம் பொருத்திய சிஎன்ஜி கிட் விருப்பத்துடன் இது வழங்கப்படுகிறது.
டாடா பஞ்ச் உடன் போட்யிடும் எக்ஸ்டர் அக்டோபர் மாதத்தில் 75 ஆயிரம் முன்பதிவுகளைப் பெற்றது, அதே நேரத்தில் எக்ஸ்டர் எஸ்யுவியின் விலைகள் இந்த ஆண்டு ஜனவரியில் திருத்தப்பட்டன. மேலும், இந்த மாடலில் மாதக்கணக்கில் வெயிட்டிங் பீரியட் இருந்த நிலையில், தற்போது முன்பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 10 முதல் 14 வாரங்கள் வரை கணிசமாகக் குறைந்துள்ளது. அதாவது எக்ஸ்டர் மாடலை இப்போது மிக எளிதாகவும் குறைந்த வெயிட்டிங் பீரியட்டில் பெற முடியும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்